புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரத்தம் தெறிக்க வேங்கையாக வந்த தங்கலான் டீசர்.. எப்படி?

Thangalaan Teaser: இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் கதறும் அளவுக்கு வெளியாகி இருக்கிறது பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியின் தங்கலான் டீசர். ஏற்கனவே இதன் மேக்கிங் வீடியோ வெளியாகி அனைவரையும் மிரள வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து வெளிவந்த போஸ்டர்களும் பெரும் ஆவலை தூண்டியது.

அதற்கேற்றார் போல் ஜனவரி 26 படம் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்ட படகுழு இன்று டீசர் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தனர். அதற்காகவே சோசியல் மீடியாவே கதி என கிடந்த ரசிகர்கள் இப்போது சந்தோஷத்தில் திக்கு முக்காடி போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு வெறிகொண்ட வேங்கையாக விக்ரம் கலக்கி இருக்கும் இந்த டீசர் வைரலாகி வருகிறது.

அதன்படி எந்த வசனமும் இல்லாமல் பின்னணி இசையிலேயே மிரட்டி இருக்கிறது இந்த வீடியோ. அதன் தொடக்கத்திலேயே ஒரு மலைப்பகுதி காட்டப்படுகிறது. அதை தொடர்ந்து வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் விக்ரம் எதையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

Also read: விக்ரமை மொத்தமாக ஏமாற்றிய பா ரஞ்சித்.. தங்கலான் படத்திற்கு போட்ட உழைப்பெல்லாம் வேஸ்ட்

இப்படியாக ஆரம்பித்த டீசர் அடுத்தடுத்த காட்சிகளில் நம்மை புல்லரிக்க வைத்திருக்கிறது. அதிலும் விக்ரம் நீண்ட விஷமுள்ள பாம்பை கையால் பிடித்து இரண்டாக பிச்சு போடும் அந்தக் காட்சி வேற லெவலில் இருக்கிறது. இப்படி ஒரு அசுரத்தனத்தை நிச்சயம் அவரிடம் இருந்து நாம் எதிர்பார்த்து இருக்க மாட்டோம்.

அதை அடுத்து தன் இன மக்களை காப்பாற்றுவதற்காக முழு மிருகமாக மாறி இருக்கும் அவர் ஒவ்வொருவரையும் குத்திக் கொல்லும் காட்சியும் மிரட்டலாக இருக்கிறது. இப்படியாக ரத்த ஆறாக ஓடும் இந்த வீடியோவில் மாளவிகா மோகனின் தோற்றமும் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது.

Also read: விக்ரம் நடிப்பில் வெளிவரப்போகும் 5 படங்கள்.. கேஜிஎஃப் க்கு டஃப் கொடுக்குமா தங்கலான்?

அதிலும் இரு கூட்டத்திற்கு நடுவே நடக்கும் சண்டை காட்சிகளும், விக்ரம் ரத்தம் பூசிக்கொண்டு நிற்கும் காட்சியும் இதை விட மிரட்டலாக கொடுக்க முடியாது என நினைக்கும் படி இருக்கிறது. ஆக மொத்தம் ஆதித்த கரிகாலனாக மிரட்டி இருந்த விக்ரம் இப்போது பல மடங்கு ஆக்ரோஷத்துடன் தங்கலானாக ரசிகர்களின் பார்வைக்கு விருந்தளிக்க வருகிறார்.

Trending News