வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கேவலமாக நடந்ததால் அசிங்கப்பட்ட வெண்பா.. வயித்தெரிச்சலில் சாவு என சாபமிட்ட கண்ணம்மா!

விஜய் டிவி பாரதிகண்ணம்மா சீரியலில் கடந்த சில வாரங்களாகவே கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை வைத்தே கதை நகர்கிறது. ஏனென்றால் அன்றைய தினத்தில் கண்ணம்மா தன்னுடைய மகள் லஷ்மிக்கு யார் அப்பா என்பதை தெரியபடுத்த போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.

இதனால் பாரதி அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு போகக்கூடாது என்று ஹைதராபாத் கிளம்பினான். ஆனால் ஹேமா பாரதியுடன் ஹைதராபாத் வர முடியாது என உறுதியாக சொன்னதால் அங்கு செல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்து டிக்கெட்டை நேற்று கிழித்து எறிந்து விட்டான்.

தற்போது கண்ணம்மா, ஹாஸ்பிடலில் இருக்கும் பாரதியை தன்னுடைய பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டும் என்று அழைக்க சென்றிருக்கிறாள். அங்கு பாரதி நான் வர முடியாது என கூறியதும், பாரதி இந்த விழாவில் கலந்து கொண்டால் ஒரு ரகசியம் தெரிவிக்கப் போவதாக கண்ணம்மா பாரதியிடம் கூறுகிறாள்.

அந்த ரகசியத்தை இப்பவே சொல் என பாரதி சொல்ல, ஒவ்வொரு ரகசியயத்திற்கும் ஒரு விலை இருக்கும் டாக்டரே என்று பாரதியை கண்ணம்மா உருட்டு கிறாள். இதையெல்லாம் ஒட்டுக்கேட்கும் வெண்பா, கண்ணம்மா பாரதியிடம் பேசி முடித்துவிட்டு வெளியே வருவதைக் கூட அறிந்திடாமல் பகிரங்கமாக அசிங்கப்பட்டு விட்டாள்.

அத்துடன் கண்ணம்மா, வெண்பாவில் தன்னுடைய பிறந்த நாள் விழாவிற்கு இன்று மாலை வருமாறு அழைக்கிறாள். இதன் பிறகு பாரதி மற்றும் வெண்பா இருவரும் பிறந்தநாள் விழாவில் கண்ணம்மா என்ன ரகசியத்தை சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அங்கு வருவார்கள்.

லஷ்மி ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் தன்னுடைய அப்பா, டாக்டர் பாரதிதான் என்பதை கண்ணம்மா தெரியபடுத்த போகிறாள். அதுமட்டுமின்றி பாரதியிடம் வளரும் ஹேமா, தான் பெற்றெடுத்த குழந்தை என்ற ரகசியத்தை பாரதியிடம் கண்ணம்மா போட்டு உடைத்து விடப் போகிறாள். இதன்பிறகு ஹேமா மற்றும் லஷ்மி இருவரும் இரட்டையர்கள் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்துவிட போகிறது.

Trending News