செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

பிரம்மாண்டத்தில் சங்கரை மிஞ்ச போகும் தவெக மாநாடு.. 21 கேள்விகளுடன் விஜய்க்கு பறந்த நோட்டீஸ்

Thalapathy Vijay: நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இந்த மாதம் டபுள் கொண்டாட்டம் வர இருக்கிறது. ஒரு பக்கம் டெக்னாலஜியில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இருக்கும் விஜய் நடித்த கோட் படம் வரும் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இன்னொரு பக்கம் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்த விஜய், அரசியல்வாதியாக இன்னும் தன்னுடைய முதல் பேச்சை தொடங்கவில்லை.

அரசியல்வாதியாக விஜய் என்ன பேசப் போகிறார், அவருடைய கொள்கை என்ன, எந்த கட்சிக்கு எதிராக தன்னை மாற்று கட்சி ஆக அறிவிக்க இருக்கிறார் என்றெல்லாம் பல எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் விடை சொல்ல போகும் நாள் தான் செப்டம்பர் 23ஆம் தேதி.

விஜய் கட்சி மாநாடு நடத்துவதற்கு ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாக விழுப்புரம் காவல்துறையினர் அறிவித்து இருக்கிறார்கள். விஜய் சினிமாவில் நடிக்கும் போது அவரை பார்ப்பதற்கே இலட்சக்கணக்கில் மக்கள் ஒரு இடத்தில் திரண்டு விடுவார்கள்.

அப்படி இருக்கும்போது அரசியல் மாநாடு என்றால் கேட்கவா வேண்டும். இந்த மாநாட்டிற்காக விக்கிரவாண்டி டோல்கேட் அருகில் 80 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். இதில் மொத்தம் ஒன்றரை லட்சம் பேர் கூடும் அளவுக்கு இட வசதி இருக்கிறது.

21 கேள்விகளுடன் விஜய்க்கு பறந்த நோட்டீஸ்

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கட்சி நிர்வாகிகள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்றவாறு பார்க்கிங் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வண்டிகளை நிறுத்தும் பார்க்கிங்குக்கு மட்டுமே 60 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.

தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு நெடுஞ்சாலையின் இடது புறம் 28 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு 40 ஏக்கர் நிலம் வாடகைக்கு வாங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் டூவீலர் மட்டும் நிறுத்துவதற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வாடகைக்கு வாங்கி இருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை பக்கத்திலேயே மாநாடு நடக்க இருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் என்பதால் தற்போது விழுப்புரம் போலீசார் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இதனால் மாநாட்டில் பங்கெடுப்பவர்களின் உணவு, பாதுகாப்பு போன்றவை குறித்து 21 கேள்விகளை விழுப்புரம் போலீசார் நோட்டீஸ் ஆக அனுப்பி இருக்கிறார்கள்.

மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர தேவைக்கு மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா? மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள்? பிரபலங்கள் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்? அவர்களுடைய பாதுகாப்புக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்ற கேள்வியுடன் நோட்டீஸ் சென்றிருக்கிறது.

இதற்கு தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் பதிலளிக்க வேண்டும். போலீசார் திருப்தி அடையும் அளவுக்கு பதில் வந்த பிறகுதான் மாநாடுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய்

- Advertisement -spot_img

Trending News