தமிழ் சினிமாவில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். அதன்பிறகு இவர் நடித்த களவாணி படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு நிறைய படங்கள் நடித்தாலும் பசங்க, களவாணி படத்தை தவிர எந்த படமும் இவருக்கு ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தரவில்லை.
சிறு வயதிலேயே சினிமா மீது உள்ள ஆர்வத்தால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூத்துப்பட்டறையில் சேர்ந்தார் விமல். அதன்பிறகு திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து கதாநாயகன் ஆகும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
ஆனாலும், விமல் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தை பிடிக்க முடியாமல் இன்றுவரை போராடி வருகிறார்.
விமல் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த சில படங்கள் இவருக்கு கை கொடுத்தாலும் இவரால் சினிமாவில் தனியாக நிலைத்து நிற்க முடியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக விமலுக்கு எந்த திரைப்பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் சினிமா நமக்குக் கை கொடுக்கவில்லை என்று வெப்சீரிஸ் பக்கம் சென்றுவிட்டார்.
விலங்கு என்ற வெப் சீரிஸில் விமல் போலீஸ்காரராக நடித்து அசத்தியுள்ளார். இதில் விமலுக்கு ஜோடியாக நடிகை இனியா நடித்துள்ளார். இதுதவிர முனீஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இத்தொடரை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
விலங்கு மதன் தயாரிக்க ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் விமலுக்கு வெள்ளித்திரை தான் கைகொடுக்கவில்லை வெப்சீரிஸ் ஆவது பெயர் வாங்கி கொடுக்கும் என எதிர்பார்த்தார். அதுமட்டுமல்லாமல் இனிமேல் கதைத் தேர்வில் மிக முக்கியத்துவம் கொடுப்பதாக விமல் கூறியிருந்தார்.
ஆனால் இத்தொடரில் விமல் பேசப்படும் ஆபாசமான, அசிங்கமான வார்த்தைகளால் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அனைவரும் முகத்தை சுளிக்கின்றனர். நீங்கள் கொஞ்சம் ஆபாசங்களை குறைத்துக்கொண்டு நடித்தால் சினிமாவில் பெரிய ஆளாய் வரலாம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.