வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வர்மனை ஃபேமஸ் ஆக்கிவிட்ட வாரிசு நடிகர்.. அந்த ரெண்டு படத்தில் நடித்ததால் விநாயகத்துக்கு அடித்த ஜாக்பாட்

Villain Actor Vinayagam: பொதுவாக ஒருவருக்கு நேரம், காலம் கூடிவிட்டால் அவர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு ஏற்ப தற்போது வில்லன் விநாயகத்தின் அசுர வளர்ச்சியை கண் முன்னே பார்க்க முடிகிறது. இவர் ஏற்கனவே தமிழில் திமிரு மற்றும் காளை போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ஜெயிலர் படத்தின் மூலம் தான் இவருக்கு சரியான அங்கீகாரமே கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்த படத்தில் நடித்தது மூலம் உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அப்படிப்பட்ட இவர் சினிமாவில் நுழைந்தபோது நூற்றில் ஒரு ஆர்டிஸ்ட் ஆகத்தான் தென்பட்டிருக்கிறார். அப்பொழுது இவருடைய திறமையை யாருமே கண்டுக்கவே இல்லை. அதனாலேயே சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது.

Also read: அடுத்தடுத்து 3 படங்கள் கமிட்டாகி வாங்கிய பெருந்தொகை.. ஜெயிலர் விநாயகன் காட்டில் கொட்டும் பேய் மழை

ஆனால் இவரிடம் ஏதோ ஒரு திறமை இருக்கிறது என்று உறுதியாக நம்பி அதை வெளிக்கொண்டு வந்தவர்தான் வாரிசு நடிகர் ஒருவர். அதன் காரணமாகவே அவர் நடிக்கும் படங்களில் இவர் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து விநாயகத்தை நடிக்க வைத்திருக்கிறார். அப்படி இவர் நடித்த படம் தான் இவருடைய கேரியருக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

இவரை சிபாரிசு செய்து இந்த அளவுக்கு தூக்கி விட்ட வாரிசு நடிகர் வேறு யாருமில்லை மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் நடித்த இரண்டு மலையாள படங்களான கலி மற்றும் கம்மட்டி. இந்த படங்களில் கண்டிப்பாக விநாயகன் வேண்டுமென்று துல்கர் சல்மான் கேட்டு இவரை நடிக்க வைத்திருக்கிறார்.

Also read: 31 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைய இருந்த உயிர் நண்பன்.. கடைசி நேரத்தில் ஜெயிலரில் வில்லனான விநாயகன்

அதற்குக் காரணம் விநாயகத்தின் தத்துரூபமான நடிப்பை பார்த்து வியந்து போய் அடம்பிடித்து கேட்டிருக்கிறார்.அப்படி விநாயகன் நடித்த இந்த படங்களில் கலி என்ற மலையாள படம் தான் இவரை எங்கேயோ கூட்டிட்டு போய் இருக்கு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விநாயகத்திற்கு ஜாக்பாட் படமாக கை கொடுத்திருக்கிறது.

இதன் மூலமாக தான் தமிழில் ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற கேரக்டரும் கிடைக்க மிக உறுதுணையாக இருந்திருக்கிறது. இப்போது இந்த ஒரு படத்தில் நடித்ததன் மூலம் வெறித்தனமான வில்லனின் நடிப்பு அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

Also read: ரஜினியவே வந்து பாருன்னு மிரட்டும் விநாயகன்.. மொக்க, லொடுக்கு என கலக்கிய 5 படங்கள்

Trending News