திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

31 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைய இருந்த உயிர் நண்பன்.. கடைசி நேரத்தில் ஜெயிலரில் வில்லனான விநாயகன்

Jailer: மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஜெயிலர் படம் பற்றிய பேச்சு தான் இப்போது சோசியல் மீடியா முழுவதும் நிரம்பி இருக்கிறது. சிறு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரை திரையில் காண இருக்கும் ரசிகர்கள் ஜெயிலரை கொண்டாடி தீர்க்கவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் உயிர் நண்பன் வில்லனாக நடிக்க இருந்த தகவல் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் 31 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இப்படத்தில் இணைய இருந்து கடைசி நேரத்தில் முடியாமல் போனது தான் சோகம்.

Also read: முதல் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி, கமல் படம்.. சூப்பர் ஸ்டாரை தூக்கி விட்டு, ஆண்டவரை காலை வாரியது

அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தளபதி படத்தில் ரஜினி, மம்முட்டி இருவரும் நண்பர்களாக இணைந்து கலக்கி இருப்பார்கள். படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் இவர்கள் இருவரும் உயிர் நண்பர்கள் தான்.

அதனாலேயே ஜெயிலர் படத்தில் கொடூர வில்லனாக நடிப்பதற்கு முதலில் மம்முட்டியை கேட்கலாம் என்று பட குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் சில சமரசங்களுக்குப் பிறகு மம்முட்டி இதில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நம் உள்ளூர் வில்லனான விநாயகன் தேர்வாகி இருக்கிறார்.

Also read: முதல் மூன்று நாள் மொத்த தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல்.. ஜெயிலர் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

ஒருவேளை மம்முட்டி மட்டும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் நிச்சயம் வேற லெவலில் இருந்திருக்கும். ஆனால் அது நடக்காமல் போய்விட்டதே என இப்போது இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்துடன் கூறி வருகின்றனர்.

இருப்பினும் ஜெயிலரில் ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால் என பான் இந்தியா நடிகர்கள் பலரும் இணைந்திருப்பது படத்திற்கான கூடுதல் பலமாக இருக்கிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: வசூலில் ரஜினியை தோற்கடித்த 2 ஜாம்பவான்கள்.. கூட்டணி சேர்ந்ததால் பதட்டத்தில் திரையுலகம்

Trending News