திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சூசகமாக காய் நகர்த்திய H.வினோத்.. அஜித் 3வது பட வாய்ப்பு கொடுக்க இது தான் காரணமா.?

மாஸ் ஹீரோவான அஜித்தை வைத்து தொடர்ந்து 3 படங்களை இயக்குபவர் ஹெச் வினோத். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்குப் பிறகு அஜித் 61 படத்தையும் வினோத் இயக்கயுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளது.

வினோத், அஜித் படத்தை இயக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது வினோத்தின் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்கள்தான். இந்த இரண்டு படங்களும் அஜித்தை கவர்ந்ததால் வினோத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதை வினோத் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், வினோத் முதல் படமான சதுரங்க வேட்டையில் கேமராமேன் நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடித்து இருப்பார். இப்படத்தில் வினோத் ஒவ்வொரு காட்சிகளையும் தத்துரூபமாக எடுத்து இருப்பார். சிறுவயதிலேயே பலரால் ஏமாற்றப்பட்ட நடராஜ் தான் பெரியவர் ஆவதற்குள் குறுக்கு வழியில் எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என எண்ணுகிறார்.

உழைத்து சம்பாதிப்பதை விட கொஞ்சம் உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்க நினைக்கும் புத்திசாலித்தனமாக சில மோசடிகளைச் செய்து சம்பாதிக்கும் ஒருவரின் கதை தான் சதுரங்க வேட்டை. இப்படத்தின் பெயருக்கேற்ப சதுரங்கம் எனப்படும் செஸ் விளையாட்டை குறிப்பிட்டிருப்பார்.

மேலும், படத்தில் அனைத்து இடங்களிலும் அதை காட்டியிருப்பார். குறிப்பாக காவல் நிலையம் காட்சிகளில், பாட்டு காட்சிகளில், பேங்க் காட்சிகளில், நீதிமன்றம் என அனைத்து இடத்திலும் செஸ் போர்டுகளை காட்டி அந்தப்படத்தின் டைட்டிலை சூசகமாக சொல்லியிருப்பார் வினோத்.

இப்படி வினோத் முதல் படத்திலேயே திரைக்கதையை எப்படி கையாள்வது என்ற யுத்தியை தெரிந்து வைத்துள்ளார். மேலும், எப்படி மோசடிகள் நடக்கிறது அதில் இருந்து எப்படி உஷாராக இருக்கவேண்டும் என்பதையும் மக்களுக்கு உணர்த்திய படம் சதுரங்க வேட்டை.

Trending News