செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஏகே 61 அஜித் போட்ட முக்கியமான கண்டிஷன்.. தலையை பிச்சுக் கொண்டு திரியும் எச் வினோத்

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச் வினோத் அஜித்தை வைத்து அடுத்த படத்தையும் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஒரு த்ரில்லர் வகையை சேர்ந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக எடுக்கப்பட இருக்கிறது.

அதனால் வினோத் அஜித்திற்காக இந்த படத்தில் நிறைய டெக்னாலஜிகளை புகுத்தி வருகிறார். மேலும் இப்படம் ஒரு திருட்டு சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்று தெரிகிறது. ஏனென்றால் இந்த படத்திற்காக ஒரு பிரம்மாண்டமான வங்கி செட் போடப்பட்டுள்ளது.

அதனால் இப்படம் வங்கியில் நடக்கும் கொள்ளை பற்றி உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக அஜித் இரண்டு மாதங்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். மேலும் குறிப்பிட்ட அந்த தேதிக்குள் படத்தை விரைவாக எடுக்க முடிக்கும்படி அவர் இயக்குனருக்கு ஆர்டர் போட்டிருக்கிறார்.

இதனால் வினோத், அஜித் கூறியபடி படத்தை எப்படியாவது சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று போர்க்கால அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இருந்தாலும் அவர் மட்டும் அப்படி நினைத்தால் போதுமா ஒட்டுமொத்த படக்குழுவும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா.

ஆனால் படக்குழுவினர் அவருக்கு எதிர்பார்த்த அளவு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இல்லை. இதனால் என்ன செய்வது என்று வினோத் தலையை பிச்சுக் கொண்டு திரிகிறார். ஏற்கனவே வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மேலாக அதிக நாட்களை இழுத்து விட்டது.

இது அஜீத்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. அதனால்தான் அஜித் இந்த படத்தை விரைவாக முடிக்க கூறியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன், சிறுத்தை சிவா என்று வரிசையாக படங்களில் நடிக்க இருக்கிறார்.

அதனால் வினோத் தற்போது 45 நாட்கள் தொடர்ச்சியாக முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். அது முடிந்த பிறகு 10 நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் அடுத்த பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த நாட்களுக்குள் படத்தின் மொத்த வேலையும் முடிக்க வேண்டும் என்று அஜித் கண்டிஷனாக கூறியிருக்கிறார்.

Trending News