அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் இயக்குனர் வினோத் கடும் அப்செட்டில் இருக்கிறார். இருந்தாலும் அவர் மீண்டும் அஜித்துடன் அடுத்த படத்தில் கூட்டணி அமைத்துள்ளார்.
அந்த வகையில் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று திரைப்படங்களை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு. இந்நிலையில் அவர் செய்த மிகப்பெரிய துரோகம் ஒன்று தற்போது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. வலிமை திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் ஒரே ஒரு விமர்சனத்தை மட்டும் தற்போது முன்வைக்கின்றனர்.
அதாவது படம் சுமாராக இருந்தாலும் படத்தில் வைக்கப்பட்டுள்ள சண்டை காட்சிகள் எதிர்பார்க்காத அளவுக்கு அற்புதமாக இருக்கிறது. இயல்பாகவே அஜித் சண்டை காட்சிகளில் பின்னி பெடலெடுப்பார். அதிலும் கார், பைக் ரேஸ் காட்சிகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
அதேபோன்றுதான் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் அபாரமான வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தப் பாராட்டை பார்த்துதான் வினோத் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
அதாவது கஷ்டப்பட்டு படத்தை இயக்கிய நமக்கு இப்படி நல்ல பாராட்டுக்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு மட்டும் கிடைக்கிறது என்ற மனக் கசப்பில் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திலும் காட்சிகள் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்ட வினோத் தற்போது ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அதாவது அஜித்தை வைத்து அவர் இயக்கப் போகும் அடுத்த திரைப்படத்தில் சுப்ரீம் சுந்தரை ஸ்டன்ட் மாஸ்டராக அவர் நியமித்துள்ளார். இதனால் அவர் அஜித்துக்கு மிகப்பெரிய துரோகத்தை விளைவித்து விட்டதாக பலரும் பேசி வருகின்றனர்.