திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விளம்பரம் தேவையில்லை என சொன்னது எல்லாம் பொய்யா.? வினோத்தை வைத்து துணிவு அஜித் ஆடும் ஆட்டம்

எச் வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு படத்தில் நடித்து முடித்துவிட்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் வெளியான நிலையில் 3-வது முறையாக அஜித்துடன் இணைந்து இருக்கும் வினோத்தின் துணிவு படத்தை குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அத்துடன் நல்ல படங்களுக்கு பிரமோஷன் தேவையில்லை என அஜித் ஏற்கனவே சொன்ன நிலையில், துணிவு படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் அஜித் இல்லாமலேயே மறைமுகமாக நடைபெற்று வருகிறது. ஏனென்றால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படத்தைக் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் எதிர விடுவதற்காகவே இயக்குனர் வினோத் சமீபத்தில் பல பேட்டிகளை அடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் அஜித்.. இணையத்தை அதிரவிடும் துணிவு படத்தின் புதிய ஸ்டில்கள்

அதில் பல சுவாரசியமான தகவல்களையும் பதிவிடுகிறார். ‘அஜித் பார்வை குரு, சுக்கிரன் பார்வை. அது என் மீது மட்டும் அல்ல, பலர் மீதும் பட வேண்டும்’ என்று வினோத் பெருமையுடன் கூறியுள்ளார். மேலும் துணிவு படத்தை பஞ்சாப் வாங்கிக் கொள்ளையை பின்னினையாக கொண்டு உருவான கதை என தவறான வதந்திகளை பரப்பி விடுகின்றனர்.

உண்மையிலேயே துணிவு ஒரு அயோக்கியர்களின் ஆட்டம். அதற்காக வில்லன்கள் அதிகம் உள்ள படம் என்று நினைக்க வேண்டாம். அயோக்கிய தனமான உலகில் நடக்கும் ஒரு கதை தான் துணிவு திரைப்படம். மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மஞ்சு வாரியர் அஜித்தின் ஜோடி அல்ல.

Also Read: முழு கதையைக் கேட்காமல் நடிக்க சம்மதித்த அஜித்.. கடைசி நேரத்தில் நம்ப வச்சு ஏமாற்றிய வினோத்

இந்த படத்தின் அஜித்தின் கூட்டாளிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். மேலும் துணிவு படத்தில் இதுவரை எந்த படத்தில் பார்த்திடாத அளவுக்கு கடலில் சேசிங் காட்சி அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் அஜித்தின் ரசிகர் வட்டம் விரிந்தது போல், துணிவு படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை வினோத் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் அஜித், விஜய் போன்ற பெரிய பெரிய நடிகர்கள் 30 வருடங்களாக தங்களது உழைப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பதால், 150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் இவர்களது படத்தில் நிச்சயம் நஷ்டம் ஏற்படாது என்று முன்கூட்டியே துணிவு படத்தின் லாபத்தையும் வினோத் விரல்விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறார்.

Also Read: பிழைப்புக்காக திரித்து பேசுவாங்க.. வெளுத்து வாங்கிய துணிவு பட இயக்குனர் எச்.வினோத்

இப்படி விளம்பரம் தேவையில்லை என சொன்னதை எல்லாம் பொய்யாக்கி, வினோத்தை வைத்து துணிவு படத்திற்காக அஜித் மறைமுகமாக ப்ரோமோஷன்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Trending News