மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய வினோதினி.. ராஜினாமா லெட்டர நீ என்கிட்ட கொடுத்துட்ட, நா யார்கிட்ட குடுக்கிறது, வைரல் மீம்ஸ்

kamal-memes
kamal-memes

Memes: சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதெல்லாம் புதியது கிடையாது. ஆனால் அதில் வெற்றி கண்டார்களா என்பதுதான் கேள்வி.

விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் வரை அவருடைய அந்தஸ்து உயர்ந்தது.

ஆனால் அதன் பிறகு நடந்தது தமிழ்நாட்டிற்கே தெரியும். அப்படித்தான் கமல் டிவி ரிமோட்டை உடைத்து ஆக்ரோஷமாக தன் அரசியல் பயணத்தை துவங்கினார்.

ஆனால் அதன் பிறகு பெரிய அளவில் மக்கள் செல்வாக்கை பெறவில்லை. அதிலும் கடந்த வருடம் நடந்த தேர்தலில் அவர் திமுகவுடன் கூட்டணி வைத்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதன் பிறகு கட்சியை கவனிக்காமல் நடிப்பு தயாரிப்பு என பிஸியாகிவிட்டார். இப்போது கேட்டால் அப்படி ஒரு கட்சி இருக்கிறதா என்று நக்கல் அடிப்பார்கள்.

இந்த கேப்பில் விஜய் கட்சி ஆரம்பித்து மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற தொடங்கிவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார்.

இதை நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். நீங்க ராஜினாமா லெட்டர கமல் சார்ட்டாக கொடுத்துட்டீங்க.

ஆனா அவரு யாரு கிட்ட கொடுப்பாரு வெரி டெலிகேட் சிச்சுவேஷன் என பல மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது. அப்படி சில நகைச்சுவையான தொகுப்பு இதோ.

Advertisement Amazon Prime Banner