புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கஜினி சஞ்சய் ராமசாமி ஆக அஜித்தின் வைரல் போஸ்டர்.. இதுதான் முருகதாஸுக்கும் இவருக்கும் ஏற்பட்ட விரிசலா?

Ajith As Sanjay Ramasamy: அஜித் சினிமாவில் நுழைவதற்கு பேக்கிரவுண்ட் சப்போர்ட் இல்லை என்றாலும் அவருடைய தன்னம்பிக்கையால் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். இதற்கு முழுக்க முழுக்க இவருடைய விடாமுயற்சி தான் காரணம். ஆனாலும் இவரை பொறுத்தவரை படங்களில் நடிப்பது இவருடைய இமேஜை குறைக்க கூடாது. அத்துடன் உடலை வருத்திக் கொண்டு ரொம்ப மெனக்கெடு செய்தும் நடிக்க விரும்ப மாட்டார்.

இந்த ஒரு காரணத்திற்காக கிடைத்த பல வாய்ப்புகளை மிஸ் பண்ணி இருக்கிறார். அப்படித்தான் 2005 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார். அதாவது சஞ்சய் ராமசாமி மற்றும் கஜினி கேரக்டரில் நடிப்பதற்கு முதலில் கமிட்டானவர் அஜித் தான். அந்த வகையில் அஜித்துக்கு ஒன் லைன் ஸ்டோரி கேட்டதுமே கதை பிடித்து இருக்கிறது.

அதனால் அஜித்தை வைத்து மிரட்டல் கஜினி என்ற டைட்டிலை வைத்து படப்பிடிப்பு துவங்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது சஞ்சய் ராமசாமி கேரக்டருக்கு ஏற்ற மாதிரி அஜித்தை வைத்து ஷூட்டிங் எல்லாம் நடந்திருக்கிறது. அதன்பின் கஜினி கேரக்டருக்கு ஏற்ற மாதிரி தோற்றத்தை மாற்றிக்கொண்டு மொட்டை அடிக்க வேண்டும் என்பது தான் அஜித்திற்கு உறுத்தலாக இருந்திருக்கிறது.

Also read: ரஜினி, கமல் தான் இத பண்ணுவாங்களா.? பேராசையில் அஜித்தை தூதுவிடப் போகும் விஜய்

ஆனால் அஜித் இந்த கேரக்டர் எனக்கு செட் ஆகாது. அதே மாதிரி என் தலையில் மொட்டை அடித்துக் கொண்டு, சட்டை போடாமல் நடிப்பதும் எனக்கு பிடிக்கவில்லை என்று ஏஆர் முருகதாஸ் இடம் கடைசி நிமிடத்தில் சொல்லி இருக்கிறார். அதன் பின் அவருக்கு வேறு வழியில்லாமல் அஜித்திடம் பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால் அஜித் தீர்மானமாக முடியாது என்று மறுத்துவிட்டார்.

இதுதான் முருகதாஸுக்கும் இவருக்கும் ஏற்பட்ட விரிசல்

இதனால் ஏஆர் முருகதாஸுக்கு அஜித் மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது. இப்பொழுது வரை இணையாமல் இருப்பதற்கு இவர்களுக்குள் ஏற்பட்ட விரிசல்தான் காரணம். அடுத்து ஏ ஆர் முருகதாஸ் கிட்டத்தட்ட இந்த கேரக்டருக்கு ஏற்ற மாதிரி பத்து நடிகர்களிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் யாருமே சம்மதத்தை தெரிவிக்காததால் கடைசியில் சூர்யா முன்வந்து நான் நடிக்கிறேன் என்று சொல்லிய பிறகு அந்த படம் மாபெரும் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது.

ஒருவேளை அஜித், கஜினி சஞ்சய் ராமசாமி கேரக்டரில் நடித்து இருந்திருந்தால் மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக இந்த படம் அமைந்திருக்கும். அத்துடன் கோட் சூட் போட்டு சஞ்சய் ராமசாமி கேரக்டர் எந்த அளவிற்கு அஜித்திற்கு பொருந்தி இருக்குமோ, அதைவிட கஜினி கேரக்டரும் பக்காவாக அந்த நேரத்தில் அமைந்திருக்கும். ஏனென்றால் அப்பொழுது அஜித்துக்கு தீனா படம் மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. அதே மாதிரி இந்த படமும் அஜித்தை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போயிருக்கும்.

கஜினி சஞ்சய் ராமசாமி ஆக அஜித்தின் வைரல் போஸ்டர்

ajith as snajay
ajith as snajay

Also read: படம் கைமாறியதால் விஜய் விட அதிக சம்பளத்தில் அஜித்.. ஜெட் வேகத்தில் எகிறிய மார்க்கெட்

Trending News