சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நடிகையாக இருந்தால் இஷ்டத்திற்கு பேசுவதா! ஆக்ரோசப்பட்ட நைனிகா வீடியோ வைரல்

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் நடிகை மீனா. தற்போது சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் மீனா தனக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வருடம் அவருடைய கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் காலமானார். இதை அடுத்து மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் மீனாவை அவருடைய தோழிகள் தான் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். சினிமா துறையில் 40 ஆண்டுகளை கடந்துள்ள மீனாவிற்கு சமீபத்தில் மீனா 40’ என விழா எடுத்து பல பிரபலங்கள் சேர்ந்து கொண்டாடினார்கள்.

Also Read: சில்வர் ஜூப்ளி இயக்குனரின் படத்தில் நடிக்க மறுத்த மீனா.. பின்னாளில் வாய்ப்பு கேட்டு அலைந்த சம்பவம்

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார்,போனி கபூர், பிரசன்னா, குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது மீனாவின் மகள் நைனிகா தன்னுடைய அம்மாவை ஊடகங்களில் தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆக்ரோசமாக பேசிய வீடியோ ஒன்று, அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஒரு பெண்ணாக சினிமாவில் 40 ஆண்டுகள் இருப்பது சாதாரண விஷயமல்ல. தனது அம்மா குழந்தை நட்சத்திரமாகவும் ஹீரோயினாகவும் நடித்து சாதித்துள்ளார். அவர் நடிகையாக இருப்பதால் இஷ்டத்திற்கு பேசி விடுகிறார்கள். சில ஊடகங்களில் அம்மாவை பற்றி தவறாக பேசுகிறார்கள். தயவு செய்து இப்படி பேச வேண்டாம். அவர் நடிகையாக இருந்தாலும் அவரும் ஒரு ஹியூமன் தான்.

Also Read: மீனாவுக்கு சுட்டு போட்டாலும் இது வராது.. ரகசியத்தை உடைத்த பிரபல இயக்குனர்

அப்பா இறந்தபோது அம்மா தனியாக அழுவார்கள். எனக்கு தெரியாமல் அழுது கொண்டே இருப்பார்கள். அதை நான் பார்த்து என்னால் என்ன சொல்வது என்று கூட எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு தற்போது தான் ஓரளவுக்கு நன்றாக இருந்து வருகிறார்கள். யாரும் என் அம்மாவை தவறாக பேச வேண்டாம் ப்ளீஸ். நான் அம்மாவிடம் பயப்பட வேண்டாம் அம்மா, நான் இருக்கிறேன். நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன்.

என்னால் இப்போது முடியவில்லை என்றாலும் வளர்ந்து உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என்று மீனாவிடம் நைனிகா உருக்கமாக வீடியோவின் மூலம் கூறினார். இந்த வீடியோ மீனாவுக்கு தெரியாமல் கலா மாஸ்டரால் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதை மீனாவும் மற்ற பிரபலங்களும் பார்த்து நைனிகா இப்படி பேசுவதை பார்த்து கண் கலங்கிவிட்டனர்.

Also Read: இப்ப வரை மீனா க்ரஷில் இருக்கும் அந்த ஹீரோ.. ரஜினி கமலுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்திய நடிகர்

Trending News