ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

இனிமேலும் விட்டால் செத்துடுவேன்.. உஷாராக மேற்படி சிகிச்சைக்காக அங்கே கிளம்பிய விஷால்

நடிகர் விஷால் கிராமத்து கதைகள் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டார். தொடர்ந்து பல வெற்றிகளை கண்ட விஷாலுக்கு சமீபகாலமாக படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

தற்போது விஷால் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். மேலும் லத்தி படம் பான் இந்தியப் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் விஷால் சமீபகாலமாக படபிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது வருகிறது.

இதற்கு முக்கிய காரணமாக பார்ப்பது விஷாலுக்கு இருக்கும் பிரச்சினை தான். அதாவது விஷால் பாலா இயக்கத்தில் உருவான அவன் இவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் முழுவதும் விஷால் மாறுகண் போல நடித்து இருப்பார். இதனால் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கான சிகிச்சையை விஷால் எடுத்துக் கொண்டபோது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி அவருக்கு வந்துள்ளதாம். இதனால் கடுமையான தலைவலி காரணமாக அவரால் படப்பிடிப்புகளில் சரியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. தொடர்ந்து பல பிரச்சினை காரணமாக உடல் எடையும் விஷாலுக்கு அதிகமானது. மேலும் பல படவாய்ப்புகளும் இதனால் விஷாலுக்கு தட்டி போனது.

இதை இப்படியே விட்டால் செத்துடுவேன், சினிமா கேரியரும் போய்விடும் என்ற பயத்தால் தற்போது அதற்கான சிகிச்சைக்காக விஷால் கேரளா சென்றுள்ளார். அந்த சிகிச்சையில் விஷால் ஆயுர்வேத முறையை பின்பற்றி வருகிறாராம். ஏற்கனவே விஜய் மற்றும் சிம்பு போன்ற நடிகர்கள் கேரளா சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சமீபத்தில் வலிமை படத்தில் பைக் ஸ்டன்ட் காட்சிகளில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய மற்றும் உடல் எடையை குறைக்க அஜித் கேரளா சென்று சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றார் என்ற தகவலும் வெளியானது. தற்போது விஷாலும் சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது.

Trending News