சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கும் விஷால்.. ஸ்ரீ ரெட்டி கேள்விக்கு கொடுத்த பதில்

Vishal: மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அநீதிகளை கூறிவருகிறார்கள். இதில் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகர் ரியாஸ்கான் போன்ற நடிகர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலையாள நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த மோகன்லால் பதவி விலகி விட்டார். இவ்வாறு மலையாள சினிமாவில் ஒரு பதட்ட நிலை இருந்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களும் மலையாள நடிகைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இன்று பிறந்தநாள் கொண்டாடிய விஷால் செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்தார். அப்போது யாராவது நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினால் செருப்பை கழட்டி அடியுங்கள் என்று விஷால் கூறியிருந்தார். அப்போது செய்தியாளர்கள் ஸ்ரீ ரெட்டி உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தாரே என்று கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீ ரெட்டி கேள்விக்கு பதில் அளித்த விஷால்

சில வருடங்களாகவே இந்த பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. ஸ்ரீ ரெட்டி இயக்குனர் பாலா, விஷால் என பல பிரபலங்கள் மீது வெளிப்படையாகவே குற்றம் சாட்டி இருக்கிறார். அப்போதெல்லாம் விஷால் மௌனம் காத்து வந்த நிலையில் இப்போது அதற்கான பதிலை அளித்திருக்கிறார்.

அதாவது ஸ்ரீ ரெட்டி யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் அவரது சேட்டைகள் எனக்கு நன்றாக தெரியும் என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் சிலர் ஸ்ரீ ரெட்டி யாருனே தெரியாதா? முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளனர்.

மேலும் விஷால் பேசுகையில், மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு ஹேமா தலைமையிலான கமிஷன் அறிக்கை அளித்ததோ அதேபோல் தமிழிலும் இதுபோன்ற ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்று விஷால் கூறியிருந்தார். இதில் எத்தனை பெரும் தலைகளின் பெயர் அடிப்பட போகிறதோ.

47வது பிறந்தநாள் கொண்டாடிய விஷால்

Trending News