சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வேட்டையாட களமிறங்கும் விஷால்.. வேங்கையாக மாறிய பிரபல நடிகர்

விஷால் லத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுனேனா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிவருகிறது. இந்நிலையில் விஷாலின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.

தற்போது விஷால் பான் இந்திய படமான மார்க் ஆண்டனி படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கயுள்ளது.

இப்படம் இதற்கு முன்னதாகவே தொடங்கப்பட இருந்த நிலையில் பட்ஜெட் அதிகமானதால் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை கிடப்பில் போட்டு இருந்தது. தற்போது விரைவில் மார்க் ஆண்டனி படத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படம் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இப்படம் முழுவதும் ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் கதாநாயகன் விஷால் மற்றும் வில்லன் எஸ் ஜே சூர்யா இருவருமே இரட்டை வேடத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் இப்படம் இரண்டு கதைகளை உள்ளடக்கி இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இப்படம் இரண்டு காலங்களில் எடுக்கப்படுவதால் படத்தில் பலர் இரட்டை வேடங்களில் தோன்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் விஷால் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தால் அவருடைய முதல் இரட்டைவேட படமாக மார்க் ஆண்டனி படம் இருக்கும்.

மேலும் மாநாடு படத்திற்குப் பிறகு எஸ் ஜே சூர்யாவின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. மேலும் இப்படத்தில் அவரும் இரட்டை வேடத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இந்த தகவல் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

Trending News