புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மகுடிக்கு ஆடும் பாம்பாக விஷால்.. ஆட்டி வைக்கும் லெப்ட் அண்ட் ரைட்

தான் நடிக்கும் படங்கள் போலவே தன் நிஜ வாழ்க்கையிலும் ஆக்ஷன் ஹீரோதான் விஷால். தென்னிந்திய திரைப்பட சங்க தேர்தல் முதல் திருட்டு டிவிடி விற்பவர்களை பிடிப்பது வரை நிஜத்திலும் தைரியமான விஷயங்களை செய்து வருகிறார்.

தற்போது லத்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கான சண்டை காட்சிகளை ஹைதராபாத்தில் மூன்று நாட்கள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் ஹைதராபாத்தின் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த விஷால் மூன்று நாட்களாக ஹோட்டல் ரூமிலிருந்து வெளியே வரவில்லையாம். நீண்ட நாட்களாக மைக்ரேன் என்ற தலைவலியால் அவதிப்பட்டு வருகிறார் விஷால். இதனால் படத்தின் ஷீட்டிங்கிற்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது.

இந்தப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களும், சங்க வேலைகளில் அவருக்கு லெப்ட் , ரைட்டாக செயல்படும் ராணா மற்றும் நந்தாவே தயாரித்து வருகிறார்கள். இவர்கள் தற்போது விஷாலை தங்கள் படத்தை முடித்து கொடுத்துவிட்டு பின்னர் மற்ற படங்களில் நடிக்கும் படியாக விஷாலை கிடுக்கிப்பிடி பிடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்தப்படத்தின் சண்டை காட்சிகளின், சூட்டிங்கின் போது பலத்த காயமுற்ற விஷால், ஆயுர்வேத மருத்துவம் செய்து கொண்டு மீண்டும் நடித்து வருகிறார். தன் நண்பர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிட போய் தற்போது தன்னுடைய நிலைமையை அவர்கள் புரிந்துக் கொள்ளாமல் நடந்து வருவது அவருக்கு பெரிதும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கிடுக்கி பிடியில் மாட்டி தற்போது விஷால் தன்னுடைய அடுத்த படங்களான துப்பறிவாளன் 2 மற்றும் கார்த்திக் சுப்பாராஜீடனான படங்களை துவங்க முடியாமல் தவித்து வருகிறார்.

Trending News