புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லட்சுமிகரமான நடிகைக்கும் விஷாலுக்கும் உள்ள உறவு.. விளக்கம் கொடுத்த மார்க் ஆண்டனி

Actor Vishal: 46 வயதிலும் முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் விஷால் ஏகப்பட்ட நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். ஆனால் லட்சுமிகரமான ஒரு நடிகையுடன் இவரை சேர்த்து வைத்து சமீப காலமாகவே பல செய்திகள் மீடியாவை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

அதற்கு விஷால் விளக்கம் கொடுத்திருந்த போதிலும் இந்த சர்ச்சை மட்டும் ஓயவில்லை. அதனாலயே இவர் தற்போது மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் இது குறித்து வெளிப்படையாகவே போட்டு உடைத்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த இப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி வாகை சூடி இருக்கிறது.

Also read: விஷால் இப்போ ஹேப்பி அண்ணாச்சி.. வசூலில் பட்டய கிளப்பும் மார்க் ஆண்டனி, 4வது நாள் நிலவரம்

அதை கேக் வெட்டி கொண்டாடிய பட குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். அதில் விஷாலிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. முக்கியமாக நடிகை லட்சுமி மேனன் உடன் அவருக்கு திருமணம் நடக்க போகிறது என வெளிவந்த செய்தி குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உடனே பதறிப் போன விஷால் எனக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். உங்களிடம் சொல்லிவிட்டு தான் செய்வேன். அதுவரை எந்த நடிகையுடனும் என்னை இணைத்து செய்திகள் வெளியிட வேண்டாம். ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என வேண்டுகோள் வைத்தார்.

Also read: 5வது நாளில் வசூல் வேட்டையாடிய விஷால்-S.J சூர்யா.. ஜவான் ஓரமா போங்க, ஆச்சரியப்படுத்திய மார்க் ஆண்டனி

மேலும் லட்சுமி மேனன் எனக்கு நெருங்கிய தோழி அதை தாண்டி வேறு எதுவும் கிடையாது. அதனால் ஏதாவது ஒரு செய்தி செய்தியை வெளியிட்டு எங்களுடைய நட்பை கெடுத்து விடாதீர்கள் என்று அவர் கூறியிருந்தார். இதன் மூலம் பல நாள் சர்ச்சைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஏற்கனவே சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் இவருக்கும் இருக்கும் காதல் பற்றி பல செய்திகள் வெளி வந்தது. அதற்கேற்றார் போல் அவர்கள் இருவரும் ஜோடியாக பல விழாக்களில் தென்பட்ட நிலையில் திடீரென பிரேக் அப் செய்தனர். இப்படியாக இந்த இரண்டு லட்சுமி நடிகைகளுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட விஷால் விரைவில் திருமணம் செய்தால் தான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

Also read: ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய், உருட்டும் விஷால்.. 50 கோடி கல்லா கட்டியும் காற்றில் பறக்கும் மானம்

Trending News