வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நாலா பக்கமும் பிரச்சனையை சந்திக்கும் விஷால்.. திரும்பிய பக்கமெல்லாம் விழும் அடி

விஷாலுக்கு ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நல்ல பெயர் இருந்தது. அதுமட்டும்இன்றி அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் அவரது ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். இதன் விளைவாக நடிகர் சங்க தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். அதன்பிறகு தான் விஷாலுக்கு ஏழரைப் பிடித்து ஆட்டுகிறது.

அதாவது விஷால் படங்கள் ஓடி கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக இரும்புத்திரை படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் ஓடவில்லை. மேலும் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : இறுதிகட்ட படப்பிடிப்பில் மார்க் ஆண்டனி.. வித்தியாசமான லுக்கில் விஷால், எஸ்ஜே சூர்யா

ஆனால் வசூலை பொருத்தவரையில் அந்த படமும் நஷ்டம் தான். இப்போது விஷால் கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் இப்போது எந்த படத்திலும் நடிக்கவில்லையாம். விஷாலை பொருத்தவரையில் சமீப காலமாக சர்ச்சையான செய்திகள் வெளியானது.

அதாவது விஷால் எந்த படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வதில்லை என தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கூட விஷால் கலந்து கொள்வது இல்லை எனக் கூறப்பட்டது.

Also Read : புரட்சி செய்ய புறப்பட்ட புரட்சித் தளபதி.. எம்ஜிஆர் ரசிகர்களை பிடிக்க, விஷால் செய்யும் சேட்டை

ஆனால் இப்போது விஷால் படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்தாலும் அவரது கைவசம் படங்கள் இல்லையாம். அதாவது கடந்த சில வருடங்களாக விஷாலின் நடிப்பில் துப்பறிவாளன் 2 மற்றும் மார்க் ஆண்டனி படங்கள் கிடப்பில் உள்ளது. இந்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கவலையில் விஷால் உள்ளாராம்.

சமீபத்தில் தான் மார்க் ஆண்டனி படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. இதில் எஸ் ஜே சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரு படங்களும் வெளியானால் தான் விஷாலின் சினிமா கேரியரில் நிலைத்து நிற்க முடியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Also Read : ஆருயிர், ஓருயிர்களுக்கு இடையே வந்த பிளவு.. ஒரே படத்தால் விஷால் கூட்டணிக்குள் வந்த அடிதடி

Trending News