பாட்டில் ராதா பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மிஸ்கின் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பேசி அனைவரது எதிர்ப்பையும் சம்பாதித்து விட்டார். குறிப்பாக இளையராஜாவை அவன் இவன் என்று பேசியது யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் எல்லா பக்கத்தில் இருந்தும் அவருக்கு எதிர்வலைகள் வந்த வண்ணம் இருக்கிறது.
மேடையில் சபை நாகரீகம் இல்லாமல், பெண்கள், பத்திரிகையாளர்கள், கண்ணியமான இயக்குனர்கள் இருக்கும் இடத்தில் அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசிக்கொண்டே இருந்தா மிஷ்கின். இதை பல பேர் ரசித்து கைதட்டி என்ஜாய் பண்ணினார்கள்.
பார்த்திபன் முதல் விஷால் வரை அனைவரும் மிஷ்கினின் பேச்சுக்கு தற்போது பதிலடி கொடுத்து வருகிறார்கள். இஷ்டத்துக்கு பேசுவது தான் நாகரீகமா என பார்த்திபன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார். அதை போல் நடிகர் விஷாலும் இந்த பேச்சுக்கு யார் காரணம் என தெரிவிக்கிறார்.
எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு அதன்பின் மன்னிப்பு கேட்டால் நாம் மறந்து விடுகிறோம். இப்பொழுதும் மிஸ்கின் அப்படித்தான் செய்துள்ளார். இதை மன்னிக்க கூடாது. அவருக்கு ஏதாவது தண்டனை கொடுத்தே தீர வேண்டும் என பழைய எதிரியை பங்கம் செய்துள்ளார்.
ஏற்கனவே விஷாலுக்கும், மிஸ்கினுக்கும் துப்பறிவாளன் படத்திலிருந்து மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இருவரும் அவரவர் பங்கிற்கு மேடையில் ஒருவரை ஒருவர் கேவலமான வார்த்தையில் திட்டிக் கொண்டனர். இப்பொழுது மிஸ்கினுக்கு இதுதான் வேலை எத்தனை முறை மன்னிக்க முடியும் என சண்டை கோழியாய் சீறுகிறார் விஷால்.