ஒரே ஒரு சக்சஸ் எப்படியாவது கொடுத்தே ஆகணும்.. விஜய்யிடம் கெஞ்சி குத்தாடும் பரிதாப நிலையில் விஷால்

தளபதி விஜய் மற்றும் விஷால் இருவருமே நண்பர்களாக தான் தற்போது வரை பழகி வருகிறார்கள். இந்நிலையில் விஷால் தற்போது நடித்து வரும் மார்க் ஆண்டனியின் படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. இதை தளபதி விஜய் தான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.

இதற்காக விஷால் விஜய்யை சமீபத்தில் சந்தித்து உள்ளார். அப்போது மார்க் ஆண்டனி டீசரை விஜய் இடம் காண்பித்துள்ளார். அதைப் பார்த்த விஜய், விஷால் மற்றும் மார்க் ஆண்டனி படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார். மேலும் பேசிய விஷால் தன்னுடைய நீண்ட நாள் விருப்பமான இயக்குனர் அவதாரத்தை விரைவில் தொடங்க உள்ளதாக கூறியிருந்தார்.

Also Read : விஷாலை தூக்கி விட நினைக்கும் தளபதி.. மார்க் ஆண்டனி படத்திற்காக விஜய் செய்த காரியம்

அதாவது துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்துள்ளதாகவும் விஜய்க்காக இரண்டு கதைகளை தயார் செய்து வைத்துள்ளதாகவும் கூறியிருந்தார். அதாவது விஷாலின் படங்கள் சில காலமாக படுதோல்வி அடைந்து வரும் நிலையில் இப்போது நைசாக விஜய்க்கு கொக்கி போட்டுள்ளார்.

அதாவது தளபதி விஜய்யின் படங்கள் எப்படி இருந்தாலும் அவருக்காகவே வசூலில் பட்டையை கிளப்பும். இதனால் விஜய்யின் ஒரு படத்தை இயக்கினால் அதன் மூலம் எப்படியும் மீண்டும் பழையபடிக்கு வந்து சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விடலாம் என்ற திட்டத்தில் விஷால் இருக்கிறார்.

Also Read : இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்

மேலும் நேரடியாக விஷால் இது குறித்து விஜய் இடம் கேட்டுக் கொண்டதால் நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம் என்று உறுதி அளித்துள்ளாராம். விஜய் இப்போது நெல்சன் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் மாதம் ரிலீஸாக காத்திருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக மூன்று, நான்கு இயக்குனர்கள் விஜய்யின் லயன் அப்பில் உள்ள நிலையில் விஷாலுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் இதை அறிந்த விஜய் ரசிகர்கள் விஷால் இயக்கத்தில் தளபதி நடிப்பதா என்று ஆவேசம் அடைந்துள்ளனர். வருங்காலத்தில் இந்த கூட்டணி அமைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read : பழசை மறந்து அம்மாவை தேடி போன வாரிசு.. ட்ரெண்டாகும் விஜய்யின் போட்டோ