திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எஸ் ஜே சூர்யாவுக்கு தலைவலியாக வந்த விஷால்.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா

நடிகர் விஷால் சமீபகாலமாக சுற்றி சுற்றி ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அவர் அதை எல்லாம் தூசி தட்டுவது போல் உதறி விட்டு தன்னுடைய வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் டென்சனின் உச்சியில் அல்லாடி கொண்டிருக்கின்றனர்.

அப்படி ஒரு நிலைமையில் தான் தற்போது எஸ் ஜே சூர்யாவும் இருக்கிறார். ஏனென்றால் அவர் இப்போது விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பட சூட்டிங்கிற்க்கு தான் விஷால் வராமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.

Also read:விஷாலுக்கு ஒரு நியாயம், சிம்புவுக்கு ஒரு நியாயமா.? உங்க அட்டகாசத்துக்கு ஒரு முடிவே இல்லையா

தயாரிப்பாளர் எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தற்போது கர்நாடகா, மைசூரில் இருக்கும் புனித் குமாரின் ஆசிரமத்திற்கு சென்று வந்திருக்கிறார். இதுதான் தற்போது எஸ் ஜே சூர்யாவை கொதிப்படைய வைத்துள்ளது. ஏனென்றால் இந்த படத்திற்காக அவர் கொடுத்த அத்தனை தேதிகளும் வீணாக போய்விட்டதாம்.

தற்போது தமிழ், தெலுங்கு உட்பட பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த திரைப்படம் ஒரு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. கொடுத்த தேதிகள் அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது பட குழு மீண்டும் தேதிகள் கேட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் அவர் இருக்கிறாராம்.

Also read:உதயநிதி பெயரை சொல்லி தப்பிக்கும் விஷால்.. பொங்கி எழுந்து முடிவு கட்ட நினைத்த தயாரிப்பாளர்

இப்படி பிரச்சனை கை மீறி சென்றதால் தயாரிப்பாளர் நடிகர் சங்கத்தையும் நாடி இருக்கிறார். மேலும் மேலும் பிரச்சினை பெரிதாவதை அறிந்த விஷாலின் நண்பர்கள் தற்போது தயாரிப்பாளர் மற்றும் படகுழுவினரை கூல் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களாம்.

ஆனாலும் எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் பணம் விரயம் ஆகிவிட்ட காரணத்தினால் தயாரிப்பாளர் எந்த சமாதானத்திற்கும் ஒத்துவராமல் இருக்கிறார். ஆனால் விஷால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த விவகாரத்தில் ரொம்பவும் மெத்தனமாக இருக்கிறாராம்.

Also read:விஷாலுக்கு சொம்படிக்கும் நட்பு வட்டாரம்.. பலகோடி நஷ்டம், கண்டுகொள்ளாத விருமன்

Trending News