வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நண்டு சிண்டெல்லாம் இயக்குனராகுது, நம்ம மட்டும் இப்படியே இருக்கோமே.. ஜேசன் சஞ்சய்யை பார்த்து ஆதங்கப்படும் விஷால்

Actor Vishal: நடிகர் விஷால் தனது 46வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார் இதனால் இன்று முழுவதும் சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் விஷால் பற்றிய செய்தி தான் பேசப்படுகிறது அதிலும் அவர் தற்போது அளித்த பேட்டியில் விஜய் பற்றியும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை பற்றியும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. காரணம் மிஸ்கின் மற்றும் விஷால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விஷால் இந்த படத்தை தானே இயக்குவதாகவும் அறிவித்தார்.

Also Read: லைக்கா தயாரிப்பில் 2000 கோடிக்கு மேல் முதலீட்டில் வரிசையாக 11 படங்கள்.. விஜய் மகனையும் லாக் செய்த புத்திசாலித்தனம்

அவர் அப்போது கூறியதோடு சரி, அதன் பிறகு துப்பறிவாளன் 2 படத்தைக் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அதன் தொடர்ச்சியாக இயக்குனர் ஹரி படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விஷால் சமீபத்திய பேட்டியில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகுவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 25 வருடங்களாக இயக்குனராக வேண்டும் என்ற தன்னுடைய கனவை ஜேசன் சஞ்சய் தட்டி எழுப்பி இருக்கிறார் என்றும் விஷால் கூறினார்.

Also Read: யாருமே எதிர்பாராத கூட்டணியில் தளபதியின் வாரிசு.. லோகேஷ் அளவுக்கு பில்டப் கொடுக்குறாங்க பழிக்குமா!

சிறுவர்களாக இருக்கும் இயக்குனர்களாகுவது என்னை ஊக்கப்படுத்துவதாகவும் விஷால் தெரிவித்தார். ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக நேற்று புகைப்படத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

மேலும் விஜய் ரசிகராக அவர் அரசியலுக்கு வந்தால் ஒரு வாக்காளராக அவர் நல்லது செய்ய வேண்டும் என நினைப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும் விஜய்யை விட ஜேசன் சஞ்சய் பற்றி பேசும்போது, ‘நண்டு சிண்டெல்லாம் இயக்குனராகுது, நம்ம மட்டும் இப்படியே இருக்குமே’ என்று விஷால் முகத்தில் ஒருவித ஆதங்கம் தெரிகிறது.

Also Read: தேவயானி மகளுக்கு ஜோடியாகும் விஜய்யின் மகன்.. அப்பா இயக்குனரின் பேராசை

Trending News