திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காதல் கல்யாணத்துக்காக பரிகாரம் செய்யும் விஷால்.. 45 வயது வரை திருமணம் தள்ளி போக இதுதான் காரணம்

இளம் நடிகர்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் 45 வயதாகும் விஷால் மட்டும் என்னும் சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கிறார். யாராவது இது பற்றி அவரிடம் கேட்டால் நடிகர் சங்கம் கட்டிடம் முடிய வேண்டும் என்றும் காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை இவர் காதலித்ததாக கூறப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பு விஷாலுக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. எப்படியோ அவர் திருமணம் செய்து கொள்வார் என்று நினைத்த வேளையில் அந்த கல்யாணமும் பாதியிலேயே நின்று போனது.

Also read: 11 தங்கைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த விஷால்.. அம்பலமான சீக்ரெட்டால் காற்றில் பறக்கும் மானம்

இப்படி அவர் வாழ்க்கையில் வந்த இரண்டு பெண்களும் பாதியிலேயே சென்று விட்டார்கள். ஆனாலும் மனம் தளராத விஷால் தற்போது காதலித்து திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். அது மட்டுமல்லாமல் தற்போது அவர் கோவில் கோவிலாக சென்று வருவதற்கும் இதுதான் காரணம்.

ஏனென்றால் விஷாலின் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதால்தான் அவருக்கு திருமண வாழ்வு கை கூடாமலேயே இருக்கிறதாம். அதனால் தான் அவர் சமீபத்தில் காசிக்கு சென்று வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் சமீபத்தில் அவர் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது கூட இந்த ஜாதக தோஷ பரிகாரம் தானாம்.

Also read: தானாக வந்து வலையில் சிக்கிய ஆடு.. பெரும் தொகையை கறக்க விஷால் போடும் பிளான்

அந்த மேடையிலேயே விஷால் தனக்கு காதல் திருமணம் தான் நடக்கும் என்று நிச்சயமாக கூறினார். தற்போது அதை நடத்தி காட்டும் தீவிரத்தில் தான் அவர் இருக்கிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் தர்மசாலா மற்றும் குக்கே சுப்ரமணிய கோவிலுக்கு சென்று சர்ப்ப தோஷ பரிகாரம் செய்திருக்கிறார். இது ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளவர்களுக்கான பரிகாரமாகும்.

அதாவது விஷாலின் ஜாதகத்தில் இந்த தோஷம் இருப்பதால் தான் அவர் அடிக்கடி கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு திருமண தடை நீங்கி விரைவில் கல்யாணம் நடக்கும் என்று அவரின் குடும்ப ஜோதிடர் கூறியிருக்கிறார். அதனால் அனைத்து பரிகாரங்களையும் செய்துவரும் விஷால் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also read: என்னது விஷால் விஷயத்துல அப்படி ஒரு சம்பவமே நடக்கலையா? பகீர் கிளப்பி, அந்தர் பல்டி அடித்த நடிகை

Trending News