வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஷால் கோயில் கட்ட தகுதியான இரண்டு பேர்.. மைண்ட் வாய்ஸ் புரியாத சந்தானம்

சந்தானம் தயவு செய்து ஹீரோவா நடிப்பதை விட்டு விட்டு இரண்டாவது ஹீரோவாக படத்தில் காமெடி செய்தாலே போதும் என்பதுதான் மதகஜராஜா படத்திற்குப் பிறகு சந்தானம் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ். படத்தை பார்த்த அனைவரும் சிரித்து சிரித்து கண்ணீருடன் தான் வெளி வருவார்கள்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகியுள்ளது. பொங்கலுக்கு வந்த படங்களில் இந்த படம் தான் ஹிட் அடித்துள்ளது. எப்பொழுதுமே தனக்கு உண்டான காமெடி ட்ராக்கை மாற்றாமல் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார் சுந்தர் சி.

இந்த படம் ரிலீசான நான்கு நாட்களில் 13 கோடி ரூபாய்கள் வசூல் செய்துள்ளது. மொத்தமாக இந்த படத்திற்கு செலவு செய்தது 15 கோடிகள். இன்னும் ஒரு வாரம் ஓடினால் இந்த படம் நல்ல லாபம் பெற்றுவிடும். இந்த படத்தில் நடித்த அனைவருமே தங்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பொதுவாக ஒரு படம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ரிலீஸ் ஆகாமல் இருந்தால் அந்தப் படத்தின் காட்சிகளையும், காமெடி ட்ராகையும் மற்ற படங்களுக்கு மாற்றுவது இயல்பான விஷயம். மதகஜராஜா படம் 10 ஆண்டுகளாக அலமாரியில் பூட்டப்பட்டு கிடந்தது.

இப்படி பல ஆண்டுகள் கழித்து வெளிவந்து ஹிட் படமாக அமைவது என்பது அரிதான விஷயம். இதற்கு முழுக்க முழுக்க காரணம் சுந்தர் சி மற்றும் சந்தானம் தான். இந்த படத்தின் காட்சிகளையோ,காமெடி டிராக்குகளையோ மற்ற படங்களுக்கு மாற்றவில்லை. இதற்காகவே ஹீரோ விஷால் அவர்களுக்கு கோயில் கட்டலாம்.

Trending News