திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆண்டவன் மேல பாரத்தை போட்டு மாஸ் நடிகரை நம்பும் விஷால்.. வாழ்வா சாவா போராட்டத்தில் வெளிவரும் படம்

சமீபகாலமாக விஷாலை கெட்ட நேரம் பிடித்து ஆட்டி வருகிறது. ஏனென்றால் கடந்த சில வருடங்களாகவே அவர் கஷ்டப்பட்டு நடித்து வரும் படங்கள் எதுவும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இருந்தாலும் அவர் மனம் தளராமல் கடின உழைப்பை போட்டு படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஆனாலும் அதற்கான பலன் என்னவோ பூஜ்ஜியம் தான் அந்த வகையில் விஷாலின் இரும்புத்திரை படத்திற்கு பிறகு வந்த ஆக்சன், எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இப்படி விஷால் நினைத்த எதுவும் கை கொடுக்காததால் தற்போது அவர் துவண்டு போன நிலையில் இருக்கிறார்.

Also read: தளபதியை வைத்து டிஆர்பியை ஏற்றிய சன் டிவி.. கோட்டை விட்ட விஜய் டிவி

இருந்தாலும் தற்போது அவர் நடித்து முடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களை கட்டாயம் கவரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறதாம். ஏனென்றால் இப்படம் டைம் டிராவல் கதைக்களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும்.

அதிலும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு வேற லெவலில் இருக்குமாம். சமீபகாலமாக அவர் தான் ஒரு இயக்குனர் என்பதையே மறந்துவிட்டு நடிப்பில் பிச்சு உதறிக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே அவரே தேடி வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.

Also read: இங்க பருப்பு வேகல, அக்கட தேசத்து அரசியலுக்கு அடி போடும் விஷால்.. கைநழுவி போன கனவு நடக்குமா?

அந்த வகையில் தற்போது விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி மூன்று காலகட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதால் அவர்களின் தோற்றமும் வித்தியாசமாக இருக்கிறது. இதுவே பெரும் எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் படத்திற்கான பிரமோஷனை விஷால் விஜய்யை வைத்தும் செய்தார்.

சமீபத்தில் அவர் தளபதியை சந்தித்தபோது எடுத்த போட்டோ வைரலான நிலையில் தற்போது படமும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அந்த வகையில் விஷால் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு மாஸ் நடிகரை நம்பி களத்தில் இறங்கி உள்ளார். மேலும் வாழ்வா சாவா போராட்டத்தில் வெளிவரும் இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: விழுந்து விழுந்து நடிச்சும் 100 கோடி வசூலை நெருங்க முடியாத 5 ஹீரோக்கள்.. பழக்கத்துக்கு நடிச்சு வெறுத்துப் போன விஜய் சேதுபதி

Trending News