புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கில்லியை ஓரம்கட்டிய விஷாலின் ரத்னம்.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Vishal : விஷால் நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியான ரத்னம் படம் பட்டையை கிளப்பி வருகிறது. விஷால் சண்டக்கோழி, தாமிரபரணி போன்ற படங்களில் இருந்தவாறு இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகளில் பூந்து விளையாடுகிறார்.

மேலும் ஹரியும் ரத்னம் படத்தின் மூலம் ஒரு சரியான கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு படுபயங்கரமாக பிரமோஷன் செய்த நிலையில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை தான் முதல் நாளில் பெற்றிருக்கிறது.

ரத்னம் படத்திற்கு போட்டியாக ஒரு நொடி படம் வெளியாகி இருந்தது. அதோடு விஜய்யின் கில்லி படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. அதாவது முதல் நாளே உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 9 கோடி கில்லி படம் வசூல் செய்திருந்தது.

ரத்னம் முதல் நாள் கலெக்ஷன்

அடுத்தடுத்த நாளும் நல்ல வசூலை பெற்று வந்த நிலையில் கிட்டத்தட்ட 16 கோடி வசூலை தற்போது வரை வசூல் செய்திருக்கிறது. ஆனால் இப்போது ரத்னம் படத்தினால் கில்லி படத்திற்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து இருக்கிறது.

அதாவது விஷாலின் ரத்னம் படம் முதல் நாளில் எல்லா மொழிகளிலும் 2.30 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆகையால் விஷாலுக்கு இந்தப் படம் நல்லா ஓபனிங் ஆகத்தான் அமைந்திருக்கிறது. மேலும் படத்திற்கு கிடைக்கும் நல்ல விமர்சனத்தால் இப்போது அடுத்தடுத்த நாள் வசூல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட விஷால் படம் 20 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கில்லி படம் நல்ல கலெக்ஷனை பெற்று வந்த நிலையில் விஷால் என்ற படத்தால் அதன் வசூல் குறைய தொடங்கி இருக்கிறது. ஆனாலும் கில்லி படம் ரிலீஸில் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபத்தை அள்ளி இருக்கிறது.

Trending News