தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஓரிரு வெற்றிப்படங்களை கொடுத்தவர் கூட அடுத்தடுத்து தொடர் வெற்றிகளை கொடுக்க முடியாமல் சினிமாவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர். அப்படி இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து அடுத்த படம் கண்டிப்பாக வெற்றி படமாக தான் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் விஷால்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் படம் மிகப்பெரிய வெற்றியை தரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அது பெருத்த ஏமாற்றம் அளித்தது. படம் கலவையான விமர்சனத்தை பெற்று, எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியையும் தரவில்லை. இதனால் நொந்து போன விஷால் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி விறுவிறுப்பாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இப்படி இருக்கையில் தற்போது விஷால் அவர்கள் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். காவல்துறையினை மையமாக கொண்டு அதன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த கதையில் நடித்து கொண்டிருக்கும் விஷால், முன்பு போல சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வருவது இல்லையாம்.
இப்படி படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அதுவும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் விஷாலின் நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள்தான் தயாரிப்பாளர்கள் என்று தெரிந்தும் இவர் கொடுத்த கால்ஷீட்டில் 25 நாட்களை தாமதமாக வந்து படப்பிடிப்பை கெடுத்து இருக்கிறார் விஷால்.
ஒரு நாள் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தால் 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும். இவர் செய்த இந்த காரியத்தால் படப்பிடிப்பிற்கு அத்தனை யூனிட் வந்தும் படப்பிடிப்பு தளத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் எடுத்து வரப்பட்ட பின்பும் ,விஷால் வர தாமதம் ஆவதால் பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி படப்பிடிப்புக்கு தாமதமாக வந்து பல நடிகர்கள் தங்கள் வாழ்க்கையையே இழந்து விட்டனர். சினிமா துறையில் அத்தனை அம்சங்களையும் கற்றுத் தேர்ந்து சிறந்த நடிகராக இருக்கும் சிம்புவும் இந்த ஒரு காரணத்தினால் தான் 3 ஆண்டுகள் சினிமா துறையை விட்டே விலக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டார். அவர் செய்த காரியத்தால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
அந்த வரிசையில் தற்போது விஷாலும் இணைந்து கொண்டிருக்கிறார். நடிகர் அதர்வாவும் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதை வழக்கமாகக் கொண்டவர். அவர் நிலையும், தற்போது தமிழ் சினிமாவில் கவலைக்கிடமாக தான் இருக்கிறது. பல தோல்விப் படங்களைக் கொடுத்து தற்போது வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய விஷால், அவர்கள் இப்படி நடந்து கொள்வது அவரின் திரை வாழ்க்கைக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி விடும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இப்படி தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக நடிகர் விஷால் மாறி வருவது அவரின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று அவரது ரசிகர்கள் குமுறுகின்றனர்.