வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வேட்டையனுக்கு பயத்தை காட்டிய விஷால்.. பின்வாங்கிய சந்திரமுகி 2, காரணம் இதுதான்

Actor Vishal: விஷால் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதனாலேயே அவர் இப்போது ஒரு வெற்றியை கொடுத்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறார்.

அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் மார்க் ஆண்டனி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளிவந்த இதன் ட்ரெய்லர் தான். டைம் டிராவல் சம்பந்தப்பட்ட கதையான இதில் எஸ் ஜே சூர்யா, விஷால் காம்பினேஷன் வேற லெவல் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

Also read: நீதிபதி போட்ட போடில் அரண்டு போன விஷால்.. மொத்தமாக ஆட்டம் காண வைத்த லைக்கா

அதன்படி நாளை வெளியாக இருக்கும் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அனைத்து தடைகளையும் உடைத்த மார்க் ஆண்டனி தற்போது கெத்தாக வெளிவர உள்ளது.

இந்நிலையில் இப்படத்துடன் போட்டி போட இருந்த ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. ஆனால் உண்மையில் படகுழுவினருக்கு விஷால் காட்டிய பயம் தான் இந்த பின்வாங்குதலுக்கு காரணமாக இருக்கிறது.

Also read: கேலி, கிண்டலுக்கு உள்ளான சந்திரமுகி 2.. பயத்தில் ரிலீஸ் தேதியை தள்ளி போட்ட லாரன்ஸ்

ஏற்கனவே ரஜினி நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிப்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. அதிலும் வேட்டையன் கதாபாத்திரத்தின் போஸ்டரை பார்த்த பலரும் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். அதற்கேற்றார் போல் ட்ரெய்லரும் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

மேலும் மார்க் ஆண்டனிக்கு இருந்த எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே போனது. இப்படிப்பட்ட காரணங்களால் தான் சந்திரமுகி 2 பட வெளியீடு தள்ளி போனதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அந்த வகையில் வேட்டையனுக்கு பயத்தை காட்டிய விஷால் மார்க் ஆண்டனி மூலம் கவனம் பெறுவாரா என்பதை நாம் விரைவில் தெரிந்து கொள்ளலாம்.

Also read: ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

Trending News