செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

5வது நாளில் வசூல் வேட்டையாடிய விஷால்-S.J சூர்யா.. ஜவான் ஓரமா போங்க, ஆச்சரியப்படுத்திய மார்க் ஆண்டனி

Mark Antony Collectin Report: கடந்த சில வருடங்களாக தோல்வியை மட்டுமே பார்த்து வந்த விஷால் இப்போது மார்க் ஆண்டனியால் உச்சி குளிர்ந்து போயிருக்கிறார். சென்ற வாரம் வெளிவந்த இப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் இப்போது வெற்றி நடை போட்டு வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷாலுடன் எஸ் ஜே சூர்யா இணைந்து மிரட்டி இருக்கும் இப்படம் சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் நகைச்சுவை சரவெடியாக இருக்கிறது. அதனாலேயே இப்போது ரசிகர்கள் படத்தை திரும்பத் திரும்ப பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் படத்தை பிடுங்கிய தனுஷ்.. எஸ்ஜே சூர்யா கூட்டணியில் 50வது படம்

அந்த வகையில் வார இறுதி நாள், விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என அடுத்தடுத்த நாட்களில் மார்க் ஆண்டனியின் கலெக்சன் பாக்ஸ் ஆபிஸை கலக்கியது. அதன்படி முதல் நான்கு நாட்களிலேயே இப்படம் 51 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

அதையடுத்து நேற்று விடுமுறை இல்லாத நாளாக இருந்த போதிலும் திரையரங்குகளில் 75 சதவீத இருக்கைகள் நிறைந்து விட்டதாம். அந்த அளவுக்கு மார்க் ஆண்டனி ஒட்டு மொத்த ஆடியன்ஸையும் தன் பக்கம் கவர்ந்திருக்கிறது.

Also read: விஷால் இப்போ ஹேப்பி அண்ணாச்சி.. வசூலில் பட்டய கிளப்பும் மார்க் ஆண்டனி, 4வது நாள் நிலவரம்

அந்த வகையில் ஐந்தாவது நாளான நேற்று படம் 4 கோடி வரை வசூலித்துள்ளது. அதன்படி இப்படத்தின் மொத்த வசூல் தற்போது 55 கோடியாக இருக்கிறது. இது அடுத்து வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த வாரம் சொல்லிக் கொள்ளும் படியான பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுவே மார்க் ஆண்டனிக்கு ஒரு பலமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரமும் திரையரங்குகளில் விஷால், எஸ் ஜே சூர்யாவின் ஆதிக்கம் தான் நிறைந்திருக்கும். அது மட்டுமல்லாமல் இப்படத்தால் ஜவான் வந்த சுவடு தெரியாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஜவான் படத்தின் வெற்றியால் ஓவர் மிதப்பில் சுற்றி தெரியும் அட்லீ.. அது சரி ஆசைப்படுவதெல்லாம் தப்பில்லையே?

Trending News