புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அம்பானிக்கு கோவில் கட்ட தயாராகும் உள்ளூர் துப்பறியும் விஞ்ஞானி விஷால்.. டபுள் ஹேப்பி மூடில் சுந்தர் சி

Madhagaja Raja release: விளக்க தேச்சு பல வருஷமா அடைஞ்சு கிடந்த பூதத்தை வெளியில் கொண்டு வருவாங்கன்னு கேள்விப்பட்டிருப்போம். அப்படித்தான் அம்பானி ஒரு விளக்கு தேய்த்ததால் 11 வருடமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த விஷாலின் மதகஜராஜா படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. விஷாலுக்கும் அம்பானிக்கும் அப்படி என்ன சம்பந்தம்.

சமீபத்தில் நடந்த அவர் மகனின் கல்யாணத்தில் கூட விஷாலை பார்க்கவில்லையே என்று தோன்றும். அம்பானி மறைமுகமாக செஞ்ச விஷயம் ஒன்னு தான் இந்த படத்தின் ரிலீஸுக்கு உதவி இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஆம்பள படத்தில் நடித்தார்.

அதைத் தொடர்ந்து ஆக்சன் படத்திலும் நடித்தார். இதற்கு முன்பாகவே 2013இல் இவர்கள் இருவரும் மதகஜராஜா என்னும் படத்தில் இணைந்தார்கள். இந்த படத்தில் விஷால் மை டியர் லவ்வர் அப்படின்னு ஒரு பாட்டையும் பாடி இருக்காரு.

அவர் பாடினதால்தான் என்னவோ படம் 11 வருஷமா இழுபறியில் இருக்கிறது. சமீபத்தில் அரண்மனை பிரமோஷனில் கலந்து கொண்ட சுந்தர் சி இடம் இந்த படத்தை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு தயாரிப்பு நிறுவனம் வேறு ஒரு படத்தில் நஷ்டத்தால் இருப்பதால், இந்த படத்தை ரிலீஸ் செய்ய மறுக்கிறார்கள்.

டபுள் ஹேப்பி மூடில் சுந்தர் சி

நாங்களே பணம் கொடுக்கிறோம் படத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று கூட கேட்டோம் என்று பேசி இருந்தார். இந்த படத்தை தயாரித்தது ஜெமினி ஃபிலிம்ஸ் தான். ஜெமினி ஃபிலிம்ஸ் தற்போது பெரிய நஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு சொந்தமான சாலிகிராமம் பிக் பஜார் மார்க்கெட்டை அம்பானி விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். முதற்கட்டமாக இதற்காக 200 கோடி கை மாறி இருக்கிறது. இந்த காசை வைத்து தான் தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் மதகஜராஜா படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

சமீபத்திய பேட்டி ஒன்றிய சுந்தர் சி, இந்த படம் இப்ப ரிலீஸ் ஆனாலும் பட்டையை கிளப்பும் என்று சொல்லி இருந்தார். அவருடைய நம்பிக்கை எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

Trending News