திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சுந்தர் சி-யின் 12 வருட ஃபார்முலா ஒர்க்கவுட் ஆனதா.? விஷால் சந்தானம் கூட்டணியின் மதகஜராஜா விமர்சனம்

Madhagajaraja Movie Review: ஒரு படம் இரண்டு மூன்று வருடங்கள் தாமதம் ஆனாலே நிச்சயம் தோல்விதான் என முத்திரை குத்தி விடுவார்கள். அப்படி லேட்டா வெளிவந்து மொக்கை வாங்கிய படங்கள் இருக்கிறது.

ஆனால் 12 வருடங்கள் கழித்து வெளிவந்தும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது மதகஜராஜா. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானத்தின் அலப்பறையில் நேற்று வெளிவந்த இப்படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

ஊரில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் விஷால் ஒரு திருமணத்திற்கு செல்கிறார். அங்கு பழைய நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர்.

அவர்களில் சந்தானம் மனைவியுடன் பிரச்சனையில் இருக்கிறார். அதேபோல் சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோருக்கு வில்லன் சோனு சூட் குடைச்சல் கொடுக்கிறார்.

இப்படி ஆளாளுக்கு ஒரு பிரச்சனையில் இருக்க அதை விஷால் தலையிட்டு எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

மதகஜராஜா விமர்சனம்

இதில் வரலட்சுமி, அஞ்சலி, கேமியா ரோலில் வரும் ஆர்யா என கலகலப்பாக கதையை நகர்த்தி சென்றுள்ளார் சுந்தர் சி. 12 வருடத்திற்கு முந்தைய கதை என்பதால் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

ஆனால் அந்த சந்தேகமே வேண்டாம் என்பது போல் படம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதிலும் ஆரம்பத்தில் இருந்து சந்தானத்தின் கவுண்டர் காமெடி படத்திற்கு பெரும் பலம்.

ஹீரோவாக இல்லாமல் இனி காமெடி ரோலையும் அவர் ஏற்க வேண்டும் என்பது இப்போது ஆடியன்ஸின் ஆசை. அப்படி இருந்தால் சந்தானத்தின் இடத்தை யாராலும் அசைக்கவே முடியாது.

அந்த அளவுக்கு விஷாலுடன் இவருடைய காமெடி கூட்டணி ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளது. சுந்தர் சி படம் என்றாலே நட்சத்திரங்களுக்கு பஞ்சம் இருக்காது.

அப்படித்தான் இதில் ஏகப்பட்ட கேரக்டர்கள் வருகிறது. அனைத்தையும் வைத்து முழு நீள நகைச்சுவையாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆனால் வழக்கம் போல ஹீரோயின்களை கவர்ச்சியாக காட்டி இருப்பது நெருடல். ஆனாலும் இந்த பொங்கலுக்கு குடும்பத்தோடு பார்த்து ரசிக்க கூடிய படம் தான் இந்த மதகஜராஜா.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

Trending News