வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம்னு விஷால் போட்ட திட்டம்.. சுந்தர் சி வைத்த டுவிஸ்ட்

Vishal: விஷாலுக்கு தொடர் தோல்வி ஏற்பட்டதால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மற்றவர்கள் கேலி பண்ணும் அளவிற்கு வேடிக்கை காட்டி வந்தார். அதனாலயே சமூக வலைதளங்கள் மூலம் இவரை அதிகமாக ட்ரோல் பண்ணினார்கள். இவருடைய செயலும் அப்படித்தான் இருக்கிறது என்பது போல் பேச்சிலே அப்பட்டமாக காட்டி வந்தார்.

இந்த நிலையில் அத்தி பூத்தார் போல் சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் அதற்கு காரணம் எஸ்ஜே சூர்யாவுடன் கூட்டணி வைத்ததால் தான். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார்.

அதில் முதற்கட்டமாக சுந்தர் சி இடம் தஞ்சம் அடைந்திருக்கிறார். என்ன காரணம் என்றால் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது. அதே மாதிரி சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படமும் அன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது.

அப்படி இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவந்தால் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் படம் வந்த சுவடு தெரியாமலேயே காணாமல் போய்விடும். ஏனென்றால் சுந்தர் சி படம் ஹியூமர் கலந்த படமாகவும் அரண்மனை படத்திற்கு நிறைய ஃபேன்ஸ்களும் இருக்கிறார்கள். அப்படி என்றால் அரண்மனை படத்திற்கு மட்டும்தான் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுப்பார்கள்.

நைசாக பேசி காரியத்தை சாதித்த விஷால்

அதனால் விஷால் நடிப்பில் வரவிருக்கும் ரத்னம் படம் அடிபட்டு விடும். உடனே விஷால் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டக்காரன் காலில் விழலாம் என்று சுந்தர் சி இடம் தஞ்சம் அடைந்து விட்டார். அந்த வகையில் சுந்தர் சி இடம் உங்க படத்தின் ரிலீஸ் தேதியை கொஞ்சம் தள்ளி வச்சுக்கோங்க என கேட்டிருக்கிறார்.

உடனே சுந்தர் சி இதெல்லாம் என் கையில் இல்லை. தயாரிப்பாளர்களிடம் போய் கேட்டுக்கோங்க என்று சொல்லிவிட்டார். பிறகு விஷால் ரொம்பவே கெஞ்சிய பிறகு சுந்தர் சி அரண்மனை 4 படத்தின் ரிலீஸ்யை மே 3 தேதிக்கு தள்ளி வைத்து விட்டார்.

ஆக மொத்தத்தில் சுந்தர் சி இடம் எப்படியோ நைசாக பேசி விஷால் காரியத்தை சாதித்து விட்டார். படம் வெளி வந்தால் தான் விஷாலுக்கு வெற்றியா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

Trending News