சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரானாவிற்காக உண்மையில் ரத்தம் சிந்திய விஷால்.. லத்தியால் வந்த விபரீதம்

ஆக்ஷன் ஹீரோ விஷால் தற்போது பான் இந்தியா திட்டமாக உருவாகி வரும் லத்தி என்ற மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தில் நடித்து வருகிறார். ஏ வினோத் குமார் இயக்கும் படத்திற்கு அனைத்து மொழிகளுக்கும் ஒரே தலைப்பு வைக்கப்படுமள்ளது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நேற்று, விஷாலின் நண்பர் கார்த்தி பல மொழிகளில் ‘லத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.’லத்தி’ தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் வெளியூரில் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலைப்பார்க்கும் கதாப்பாத்திரத்தில் விஷால் நடிக்கிறார்.

இந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ள விஷால், தனது ட்விட்டரில், “ஆமாம், கடந்த காலங்களில் பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளேன், பல அதிரடி படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இது வாழ்நாள் முழுவதும் சிறப்பான அனுபவம் வாய்ந்த பீட்டர் ஹெய்ன் மாஸ்டருடன் இது முதல் படம். ‘லத்தி’யில் ஆக்ஷன் எபிசோட்களின் படப்பிடிப்பின் போது பலத்த காயம் அடைந்ததேன். இருப்பினும் அவையும் சிறப்பான அனுபவம் என்று நடிகர் விவரிக்கிறார்.

இந்தப் படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தாவும், ரமணாவும் இணைந்து தயாரிக்கின்றனர். ரமணாவின் ரா, நந்தாவின் னா இந்த நான்கு எழுத்தையும் சேர்த்து, ரானா என்று தங்களின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.

பலத்த காயம் ஏற்பட்டாலும் விஷால் தனது கடமையைச் செய்வது போல் போஸ்டர் வெகுவாகக் கவர்கிறது. கட்டுமானத்தில் இருக்கும் ஒரு பிரமாண்ட கட்டிடத்தின் முன் நின்று, காக்கி உடையில் விஷால் கையில் லத்தியை பிடித்தபடி காணப்பட்டார். வெவ்வேறு நிலைகளில் இருந்து லேசர் கதிர்களை நாம் பார்க்க முடியும் என்பதால், கட்டிடத்தில் உள்ளவர்கள் விஷாலை துப்பாக்கியால் குறிவைத்ததாகத் தெரிகிறது.

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ‘லத்தி’ படத்தில் குறிப்பிடத்தக்க ஸ்டண்ட் காட்சிகள் அமைத்துள்ளார். இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். எம்.பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் வெள்ளித்திரைக்கு வர உள்ளது.

Trending News