ஆரம்பத்தில் விஷால் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்த பிறகு விஷாலுக்கு தலைகனம் வந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். விஷால் ஏதாவது பேசி கடைசியில் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்கிறார்.
வரலட்சுமி உடன் காதல்: விஷால், வரலட்சுமி இருவரும் பல வருடமாக காதலித்து வந்தனர். விஷால் ஒரு பொது மேடையில் எனக்கு மனைவியாக வர போறவங்க லட்சுமிகரமானவங்க என வெளிப்படையாக வரலட்சுமியை குறிப்பிடுவது போல கூறியிருந்தார். இதனால் வரலட்சுமி விஷால் மீது கோபித்துக் கொண்டு தன் காதலை முறித்துக்கொண்டார்.
நடிகர் சங்க தேர்தல்: நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்டார். நடிகர் சங்க தேர்தல் நடக்கும் போது விஷாலை சில மர்ம நபர்கள் தாக்கினார்கள். இதனால் விஷால் கீழே மயங்கி விழுந்தார். பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
திருட்டு டிவிடி: விஷால் நடிப்பில் வெளியான மருது படம் ரிலீஸ் ஆன உடனே திருட்டு டிவிடி வந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். யார் இந்த திருட்டு டிவிடியை தயாரிக்கிறார்கள் என போலீஸ் மாதிரி துப்பறிய விஷாலே களத்தில் இறங்கினார். ஆனால் அடுத்த இரண்டு படங்களில் விஷால் கமிட்டான உடன் திருட்டு டிவிடியை பற்றி வாயே திறக்கவில்லை.
மிஷ்கின் உடன் சண்டை: மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து, தயாரித்த படம் துப்பறிவாளன் 2. விஷால் மிஷ்கினிடம் தகாத வார்த்தையால் பேசி சண்டை போட்டதால் இப்படத்தில் இருந்த மிஸ்கின் விலகிவிட்டார். அதன்பிறகு துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கினார். தற்போது மிஸ்கின் இல்லை என்றால் அந்த படத்தை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கல்யாண சபதம்: விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் எனக்கு திருமணம் நடக்கும் என அறிவித்தார். இந்தக் கட்டிடம் பல வருடங்களாகக் கட்டிய பாடும் இல்லை அதேபோல் விஷாலுக்கு 45 வயதை கடந்து இன்னும் திருமணமும் ஆன பாடும் இல்லை.