ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மகனின் 14-வது பிறந்த நாளை கொண்டாடிய விஷால்.. வெளியான புகைப்படத்தால் வந்த அதிர்ச்சி

Actor Vishal: ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா ஆகியோர் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் இவர் உயர்ந்துள்ளார். இப்படி பிஸியாக இருக்கும் வேலையிலும் விஷால் தன் மகனின் 14 வது பிறந்த நாளை கொண்டாடி அந்த புகைப்படத்தை தன் சோசியல் மீடியாவிலும் வெளியிட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: 40 வருட அனுபவத்தை 30 நிமிடங்களில் காட்டிய சூப்பர் ஸ்டார்.. பற்றி எரிந்த விஜய், ரஜினி மோதல் முடிவுக்கு வந்தது

ஏனென்றால் தற்போது 45 வயதான நிலையிலும் இவர் திருமணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறார். இதற்கு முன்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்ததும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இவர் கூறியிருந்தார். அதை அடுத்து சில வருடங்களுக்கு முன்பு அனிஷா என்ற பெண்ணுடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் பல்வேறு கருத்து வேறுபாடுகளின் காரணமாக அது பாதியிலேயே நின்று போனது. இந்த சூழலில் இவருக்கு மகனா என்று பலரும் அதிர்ச்சி விலகாத நிலையில் கேட்டு வருகின்றனர். ஆனால் விஷால் வெளியிட்ட அந்த போட்டோவை பார்த்ததும் பலருக்கும் என்ன ரியாக்ஷன் கொடுப்பதென்றே தெரியவில்லை.

Also read: வில்லத்தனத்தின் மொத்த உருவமான ஆண்டனி தாஸ்.. மிரட்டல் வீடியோவை வெளியிட்ட லியோ டீம்

ஏனென்றால் அவர் தன் வீட்டு செல்லப்பிராணியான நாயின் பிறந்த நாளை தான் கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். மேலும் ஹீரோயின்கள் எல்லாம் நாய் குட்டியை மகன் என்று கொஞ்சுவது போல் விஷாலும் தன் வீட்டு செல்லப்பிராணியை தன்னுடைய மகன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த பிறந்த நாளை அவர் கேக் வெட்டியும் கொண்டாடியிருக்கிறார். அது குறித்த போட்டோவை தான் தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அதில் நாய் அழகாக சோபாவில் படுத்தபடி போஸ் கொடுத்திருக்கிறது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும் அனைவரையும் கவனிக்க வைத்த ஒரு விஷயமும் அந்த போட்டோவில் இருக்கிறது. அதாவது விஷால் விஜய்யுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவும் அதில் இடம் பிடித்துள்ளது. இதைத்தான் ரசிகர்கள் இப்போது பெரிதாக பேசி வருகின்றனர்.

மகனின் 14-வது பிறந்த நாளை கொண்டாடிய விஷால்

vishal-actor
vishal-actor

 

Trending News