வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அடுத்த தளபதி நான்தான்னு விஷால் செய்யும் அக்கப்போர்.. இந்த எலக்ஷனில் அசிங்கப்பட்ட ரத்னம்

Actor Vishal : சமீபகாலமாகவே விஷால் செய்யும் ஒவ்வொரு காரியமும் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அவரும் அதற்கு ஏற்றார் போல் ஏடாகூடமாக செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஹரி இயக்கத்தில் விஷால் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 2026 இல் விஷால் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

சைக்கிளில் வந்த விஷால்

vishal
vishal

இதற்கு முன்னதாக விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கிய நிலையில் அவரும் 2026 ஆம் ஆண்டிலிருந்து போட்டியிட இருக்கிறார். இப்போது விஜய்க்கு போட்டியாக தான் விஷாலும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக செய்திகள் வெளியானது.

விஜய் ஃபார்முலாவை பின்பற்றும் விஷால்

vishal
vishal

மேலும் 2018 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட்டபோது அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சைக்கிளில் வந்து அண்ணா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார்.

முன்பு எசர்ச்சையாக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இப்போது விஜய்யின் பார்முலாவை அப்படியே புரட்சித் தளபதி ஃபாலோ செய்கிறார்.

இதை வைத்து கண்டிப்பாக இணையவாசிகள் மீம்ஸ் போட்டு அதகளம் செய்யப் போகிறார்கள். விஷால் இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் வாண்ட்டாக வந்து அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார்.

Trending News