திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

5 தொடர் தோல்விகளை கொடுத்த விஷால்.. எழுந்திருக்கவே முடியாமல் படுத்தும் மோசமான கதை தேர்வு

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்த விஷால் தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான தோல்வி அடைந்த திரைப்படங்கள் படங்களில் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்வதால் எழுந்திருக்கவே முடியாமல் பயங்கர அடி வாங்கிய நிலையிலும் மீண்டும் மீண்டும் மோசமான கதைகளையே தேர்வு செய்து கொண்டிருக்கிறார். அப்படி வெளியானது தான் இந்த ஐந்து படங்களும்.

ஆக்சன்:2019 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஒரு அதிரடி திரைப்படம் ஆகும் .இதில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் விஷால் மற்றும் தமன்னா உளவுத்துறை அதிகாரியாக இணைந்து பயங்கரவாதியை வேட்டையாடும் ஒரு உளவாளியாக செயல்படுகின்றன. இப்படம் அதிரடி காட்சிகள் மற்றும் மரண தண்டனை குறித்து விமர்சனங்களுக்காக பாராட்டை பெற்றது.ஆனாலும் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்த படமாகும்.

Also Read: கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல.. 6 ஃப்ளாப் கொடுத்துவிட்டு விஷாலின் ஆணவ பேச்சு

சக்ரா:2021 ஆம் ஆண்டு இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் வெளியான ஒரு அதிரடி திரைப்படம் ஆகும்.படத்தில் விஷால், சிரத்தா சீறிநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படமானது கணினி குற்றங்கள் மற்றும் இணைய வணிக மோசடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும் .இப்படம் நேர்மறையான மற்றும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது .

எனிமி:2021 ஆம் ஆண்டு இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எஸ் வினோத் குமார் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் விஷால், ஆர்யா, மிர்னாலினி ரவி, மம்தா மோகந்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் தம்பி ராமையா மற்றும் அவரது மகன் விஷால் அப்பாவுடன் இருந்து வணிக நிர்வாகத்தை கவனித்து வருகிறார். அங்கு தமிழ் குடும்பங்கள் பல வாழ்ந்த வருகின்றனர் இந்நிலையில் விஷாலுக்கு தெரிந்த 11 குடும்பத்தில் சிலிண்டர் விபத்தில் இறந்து விடுகின்றன. இதனை கண்டுபிடிப்பதை மையமாக வைத்து படமானது அமைந்துள்ளது.

Also Read: தொடர்ந்து 6 பட தோல்விக்கு பின் லத்தியை சுழட்டிய விஷால்.. நேர்மையான கொம்பனாக வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

வீரமே வாகை சூடும்: 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பா சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயத்தி, யோகி பாபு, ஜெயபாலன் உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர். இப்படம் அதிரடி மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தினை நடிகர் விஷால் தனது “விஷால் ஃபிலிம் ஃபேக்டரி” தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.ஒரு சாமானிய மனிதனுக்கும் அரசியல்வாதி ஒருவருக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த வீரமே வாகை சூடவா திரைப்படத்தின் கதை கருவாகும். ஒரு சாமானிய குடிமகன் அவருக்கு நடக்கும் அநியாயம் மற்றும் சூழ்நிலைகளை எப்படி கையாண்டு அதிலிருந்து மீண்டு வருகிறார் என்பதை அதிரடி மற்றும் திரில்லர் கதைகளத்தில் சொல்வதே வீரமே வாகை சூடும் திரைப்படமாகும்.

லத்தி: அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் வெளியான அதிரடி மற்றும் திரில்லர் கலந்த திரைப்படம் ஆகும்.படத்தில் விஷால், சுனைனா, பிரபு என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.விஷால் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்துள்ளார். வழக்கமாக கதாநாயகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது இன்ஸ்பெக்டர், கமிஷனர், டிஜிபி போன்ற அதிகாரிகளாகத்தான் நடிப்பார்கள். ஆனால் விஷால் இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார். விஷால் நடிப்பில் உருவாகி உள்ள லத்தி திரைப்படம் ஒற்றையாக திரியும் காட்டு யானை போல் சமூக விரோதிகளை தனி ஒருவராக லத்தியை மட்டுமே வைத்து கொண்டு வேட்டையாடுவது போல் இக்கதையானது அமைந்துள்ளது.

Also Read: சமீபத்தில் பெரிய ஹீரோக்கள் கொடுத்த 5 மொக்கைப் படங்கள்.. மகனுடன் ஓவர் பில்டப் கொடுத்தும் செல்லுபடியாகாத மகான்

இவ்வாறு இந்த 5 படங்களும் விஷால் நடிப்பில் வெளிவந்து அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் ஆகும். இருந்தும் நல்ல கதை அம்சம் கொண்ட கதையினை தேர்வு செய்யாமல் இருப்பதே விஷாலின் திரை வாழ்விற்கு தோல்வி படங்களாக அமைகிறது.

Trending News