வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

உதயநிதியை மறைமுகமாக வறுத்தெடுத்த விஷால்.. எங்கேயோ செமத்தயா வாங்கி இருப்பார் போல

Vishal: விஷாலை பொருத்தவரை என்ன தோன்றுகிறதோ அதை இடம், பொருள், ஏவல் என்று கூட பார்க்காமல் ஏடாகூடமாக பேசி விடுவார். இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கி ரொம்பவே தவித்து வந்திருக்கிறார். இன்னொரு பக்கம் இவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை அடைந்து சினிமாவில் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் மூலம் இவருடைய செகண்ட் இன்னிங்ஸில் வெற்றியை பார்த்து வருகிறார். அத்துடன் இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய விஷால், உதயநிதியை மறைமுகமாக தாக்கி வறுத்தெடுத்து இருக்கிறார். அதாவது தயவு செய்து யாரும் வெறும் நான்கு கோடி பணத்தை வைத்துக்கொண்டு படம் தயாரிக்கிறேன் என்று வந்து விடாதீர்கள்.

Also read: விஷால் கூடவே இருந்து குழி பறித்த 4 பேர்.. நண்பன் என்று சொல்லியே முதுகில் குத்திய துரோகிகள்

அப்படி அந்த பணம் உங்களிடம் இருந்தால் பிள்ளை குட்டி பெயரில் டெபாசிட் பண்ணுங்க. இல்லையென்றால் நிலத்தை வாங்கி சந்தோஷமாக குடும்பத்துடன் இருந்து கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு சினிமாவில் படம் தயாரிக்கிறேன் என்று ஆசைப்பட்டு விடாதீர்கள். அப்படி உங்களுக்கு ஒரு வேலை ஆசை இருந்தால் கூட இன்னும் இரண்டு வருஷத்திற்கு சினிமாவில் தலை வச்சு படுக்காதிங்க என்று ஆதங்கத்துடன் சொல்லி இருக்கிறார்.

இதற்கு காரணம் விஷால் எங்கேயோ ரொம்பவே அடிபட்டி இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அதாவது உதயநிதி மற்றும் விஷால் நெருங்கிய நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனாலும் இவர்களுக்குள் அதிக கருத்து வேறுபாடு வந்திருக்கிறது. முக்கியமாக சண்டைக்கோழி 2 எடுக்கும் பொழுது காரசாரமான விவாதங்கள் இவர்களுக்குள் ஏற்பட்டு இருக்கிறது.

Also read: ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய், உருட்டும் விஷால்.. 50 கோடி கல்லா கட்டியும் காற்றில் பறக்கும் மானம்

அதன் பின் இந்த படத்தை விஷாலை தயாரித்து வெளியிட்டார். அதனால் தான் நொந்து நூடில்ஸ் ஆகி பேசி இருக்கிறார். காரணம் இப்படத்தின் மூலம் மொத்தமாக பணத்தை இழந்து ரொம்பவே அடிபட்டிருக்கிறார். அத்துடன் தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்ததால் இன்னும் இரண்டு வருஷத்திற்கு சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசையை விட்டு விடுங்கள் என சொல்லி இருக்கிறார்.

ஏனென்றால் உதயநிதி ஆட்சியில் இருக்கும் வரை இந்த மாதிரி விஷயங்கள் தொடர்ந்து கொண்டே வரும். அதனால் அவர் ஆட்சி முடிந்த பிறகு படம் தயாரிப்பதற்கு வாருங்கள் என்று மறைமுகமாக சின்ன பட்ஜெட் வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு விஷால் அவருடைய அனுபவத்தை கூறியிருக்கிறார்.

Also read: மார்க் ஆண்டனி வெற்றியை முழுசா கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்.. சுற்றி அடிக்கும் ஏழரை நாட்டு சனி

Trending News