செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சரத்குமாரை மறைமுகமாக குத்தி காட்டிய விஷால்.. பணத்திற்காக மீண்டும் பற்றி எரியும் பழைய பகை

கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஷால் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. கால்ஷூட் சொதப்பல், பணப்பிரச்சினை என்று இவர் மீது அடுத்தடுத்த புகார்கள் கிளம்பி வருகிறது. அது மட்டுமல்லாமல் அவர் நடிப்பில் வெளியான கடந்த சில திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அந்த வகையில் விஷால் தற்போது நடித்திருக்கும் லத்தி திரைப்படத்தை தான் பெரிதும் நம்பி இருக்கிறார். அதற்கான பிரமோஷனில் அவர் தற்போது பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சரத்குமாரை மறைமுகமாக குத்தி காட்டுவது போன்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் திரை துறையில் வெளிப்படையாகவே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

Also read: மீண்டும் இணைய ஆசைப்பட்ட இயக்குனர்.. பட்ட அவமானத்தை மறக்காமல் நோஸ்கட் செய்த விஷால்

அதாவது நடிகர் சங்க தேர்தலில் ஆரம்பித்த இவர்களுடைய பிரச்சனை அதன் பிறகும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் அவர் சூதாட்ட விளம்பரங்களில் நான் நடிக்க மாட்டேன் என்றும் அதன் மூலம் வரும் பணம் தவறானது. அது எனக்கு வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். அவர் கூறிய இந்த கருத்து சரத்குமாரை குத்தி காட்டுவது போல் இருக்கிறது.

ஏனென்றால் பல நடிகர்களும் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தால் அது மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அது போன்ற விளம்பர படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் மூத்த நடிகராக இருக்கும் சரத்குமார் சூதாட்ட விளம்பர படத்தில் நடித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை ரசிகர்களும் விரும்பவில்லை.

Also read: லோகேஷை பார்த்து பொறாமையில் பொங்கிய விஷால்.. லத்தி பட விளம்பரத்தில் போட்ட பெரிய ஸ்கெட்ச்

ஆனால் இது போன்ற விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாத சரத்குமார் அரசே இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்யவில்லை. அப்படி இருக்கும்போதே நான் ஏன் இந்த விளம்பர படத்தில் நடிக்க கூடாது என்று பேசி இருந்தார். இதன் மூலம் அவர் எனக்கு பணம் தான் முக்கியம் ரசிகர்களை பற்றி எந்த கவலையும் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.

இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தற்போது விஷால் அது குறித்து தான் நாசுக்காக கருத்து தெரிவித்திருக்கிறார். இதை பார்க்கும் பொழுது பல ஆண்டுகளாக அவர்களுக்குள் இருந்த அந்த பழைய பகை மட்டும் இன்னும் மாறவில்லை என்று தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் விஷால் கிடைக்கும் கேப்பில் எல்லாம் சரத்குமாரை வச்சு செய்து வருகிறார்.

Also read: கையில் லத்தியுடன் வெளுத்து வாங்கும் விஷால்.. ரிலீஸ் தேதியுடன் அதிரடி காட்டும் ட்ரைலர்

Trending News