விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி பல தடைகளை கடந்து இன்று ஒரு வழியாக வெளியாகி இருக்கிறது. வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் ரமணா மற்றும் நந்தா இருவரும் சேர்ந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சுனைனா, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
எப்போதோ ரிலீஸ் ஆக வேண்டிய இந்த திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு வந்தது. தற்போது இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. கடைசியாக விஷால் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதிலும் தொடர்ச்சியாக வெளிவந்த ஆறு படங்களும் தோல்வியை தான் தழுவியது.

Also read: விஷால் தொடர்ந்து மண்ணை கவ்விய 6 படங்கள்.. நாளை வெளியாகும் ‘லத்தி’யாவது வாகை சூடுமா?
அந்த வகையில் இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அதில் விஷால் இந்த படத்திற்காக ரொம்ப மெனக்கெட்டு இருப்பதாகவும், அவருடைய ஆக்சன் காட்சிகள் அனைத்தும் மிரட்டல் ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் விஷால் படங்கள் வரவேற்பு பெறாவிட்டாலும் அவர் ஒவ்வொரு படத்திலும் அர்ப்பணிப்புடன் தான் நடித்து வருகிறார்.

அதேபோன்று இப்படத்தில் அவர் ஆக்சன், எமோஷனல் என அனைத்திலும் அபாரமாக நடித்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்தத் திரைப்படத்தை விஷாலுக்காகவே ஒருமுறை பார்க்கலாம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Also read: மீண்டும் இணைய ஆசைப்பட்ட இயக்குனர்.. பட்ட அவமானத்தை மறக்காமல் நோஸ்கட் செய்த விஷால்
இப்படி படத்திற்கு சில பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் கதையை பொருத்தவரையில் பல திரைப்படங்களின் சாயல் இதில் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது படத்தில் சண்டை காட்சிகள் அனைத்தும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்ததைப் போன்று இருப்பதாக தற்போது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் பழிவாங்கும் காட்சிகள் தெறி படத்தைப் போன்று இருப்பதாகவும், கிளைமாக்ஸ் காட்சி வேட்டையாடு விளையாடு படத்தை நினைவு படுத்துவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மற்றபடி படத்தின் திரைகதையும், அப்பா, மகன் இருவருக்கும் இடையே இருக்கும் எமோஷனல் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஆக மொத்தம் விஷாலுக்கு இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை கொடுத்திருக்கிறது.
Also read: சரத்குமாரை மறைமுகமாக குத்தி காட்டிய விஷால்.. பணத்திற்காக மீண்டும் பற்றி எரியும் பழைய பகை