சுழட்டி அடிக்கப்பட்ட லத்தி.. முதல் நாள் வசூலில் மண்ணை கவ்விய விஷால்

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ஆறு படங்களுமே தொடர் தோல்வியை சந்தித்து வந்ததால் லத்தி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் இருந்தனர். வினோத் குமார் இயக்கத்தில் விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா தயாரிப்பில் லத்தி படம் உருவாகி இருந்தது.

மேலும் விஷாலின் லத்தி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது. ஆரம்பத்தில் லத்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்தும் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ஒரு வழியாக நேற்று திரையரங்குகளில் வெளியானது.

Also Read : விஷாலை படுகுழியில் தள்ளிய லத்தி.. தோல்விக்கான 10 பொருத்தமும் பக்காவா இருக்கு

இந்த படத்தில் கான்ஸ்டபிள் முருகானந்தமாக விஷால் நடித்திருந்தார். மேலும் சாதாரண குடும்பஸ்தராக மனைவி மற்றும் மகன் மீது பாசம் வைத்துள்ள ஆளாக விஷால் நடித்திருந்தார். இப்படத்தில் சுனைனா, பிரபு போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. லத்தி படத்தின் முதல் பாதியில் இருந்த சுறுசுறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். ஆனால் விஷாலின் நடிப்பு அபரிவிதமாக இருந்ததாக கூறப்பட்டது.

Also Read : அத்தனையும் நடிப்பு, உள்ளுக்குள்ள அம்புட்டு ஆசை.. உடைந்து போன விஷால் போடும் வெளி வேஷம்

இந்நிலையில் லத்தி படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் வெறும் 2 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. லத்தி படமும் இவ்வாறு வசூலில் மண்ணை கவ்வி உள்ளதால் விஷாலின் மார்க்கெட் இறங்கி உள்ளது.

ஏற்கனவே விஷாலின் படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன்வரவில்லை. அவரது நண்பர்கள் தான் முன்வந்து லத்தி படத்தை தயாரித்தார்கள். இந்தப் படமும் இப்போது வசூலில் பெருத்த அடி வாங்கியுள்ளதால் அடுத்ததாக விஷால் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள்.

Also Read : கான்ஸ்டபிள் முருகானந்தமாக வாழ்ந்திருக்கும் விஷால்.. லத்தி பட முழு விமர்சனம்