திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

2 சூப்பர் ஹிட் படங்களை காப்பி அடித்த விஷாலின் லத்தி.. கடைசியில் வெளிவந்த சுட்ட கதை

கான்ஸ்டபிள் முருகானந்தமாக விஷால் நடித்த லத்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. நேற்று வெளியான இந்த திரைப்படம் முதல் நாளிலேயே சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் உயிரோட்டம் இல்லாத கதை தான். ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்து ஹிட்டான இரண்டு திரைப்படங்களையும் இப்படம் ஞாபகப்படுத்தியுள்ளது.

அதாவது இப்படத்தின் கதை என்னவென்றால் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் விஷால் ஒரு லத்தி ஸ்பெஷலிஸ்ட். லத்தியை சுழட்டிக்கொண்டு குற்றவாளிகளை தாறுமாறாக வெளுத்து வாங்குவதில் அவர் கில்லாடி. அப்படி அடித்தே அவர்களிடம் உண்மையை அவர் கறந்து விடுவார். ஒரு கட்டத்தில் வில்லனால் உடல் ரீதியாக துன்புறுத்தப்படும் ஒரு பெண் அது குறித்து போலீசில் வாக்குமூலம் கொடுக்கிறார்.

Also read: சுழட்டி அடிக்கப்பட்ட லத்தி.. முதல் நாள் வசூலில் மண்ணை கவ்விய விஷால்

அந்த குற்றவாளி யார் என்று கண்டுபிடிப்பது போல் கதை நகர்கிறது. இந்த கதையை விஜய்யின் தெறி படத்தில் நாம் பார்த்திருப்போம். அட்லி இயக்கத்தில் வெளிவந்த அந்த படமே விஜயகாந்தின் சத்ரியன் பட கதையின் காப்பி என எல்லோரும் கலாய்த்து வந்தனர். ஆனால் விஷால் அப்படிப்பட்ட காப்பி இயக்குனரின் கதையையே ஆட்டையை போட்டு இருக்கிறார். இதுதான் பலரையும் கலாய்க்க வைத்திருக்கிறது.

அதேபோன்று வில்லனை கண்டுபிடிக்கும் விஷால் அவரை கட்டி வைத்து அடிப்பார். ஆனால் வில்லனுக்கு தன்னை அடித்தது யார் என்று தெரியாது. ஏனென்றால் அவருடைய முகத்தை மூடி விட்டு தான் விஷால் அடிப்பார். அதன் பிறகு வில்லன் தன்னை அடித்தவன் யார் என்று கண்டுபிடிக்க படாத பாடு படுவார். இந்த கதையை விக்ரம் பிரபுவின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வந்த இவன் வேற மாதிரி படத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.

Also read: விஷாலை படுகுழியில் தள்ளிய லத்தி.. தோல்விக்கான 10 பொருத்தமும் பக்காவா இருக்கு

இப்படி இதற்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற இந்த இரண்டு படங்களையும் கலந்து தான் லத்தி படத்தை எடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் படத்தில் அப்பா மகன் சென்டிமென்ட் காட்சிகளையும் இதற்கு முன்பு பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இப்படி லத்தி படத்தில் பல படங்களின் சாயல்கள் இருக்கிறது. அதனால்தான் இந்த படம் இப்போது தோல்வி அடைந்துள்ளது.

ஏற்கனவே கடந்த சில வருடங்களாக விஷால் நடிப்பில் வெளிவந்த எனிமி, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட ஆறு திரைப்படங்கள் தோல்வி அடைந்தது. அதில் ஏழாவதாக லத்தி திரைப்படமும் இணைந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்த படமாவது அவருடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்துமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: அத்தனையும் நடிப்பு, உள்ளுக்குள்ள அம்புட்டு ஆசை.. உடைந்து போன விஷால் போடும் வெளி வேஷம்

Trending News