செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜயகாந்த் மகனுக்கு விஷால் கொடுத்த வாக்குறுதி.. இவர் என்ன சொன்னாலும் சிரிப்பு தான் வருது

Vishal – Vijayakanth : நடிகர் விஷால் ஒரு காலத்தில் செம கெத்துடன் தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அவர் எது சொன்னாலும் இப்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ஒரு வாக்குறுதியை விட்டிருக்கிறார்.

அதாவது விஜயகாந்த் இரங்கல் கூட்டத்தை நடிகர் சங்கம் சமீபத்தில் நடத்தியது. இதில் உலகநாயகன் கமல்ஹாசனை தவிர பெரிய ஹீரோக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மேலும் மற்ற நடிகர், நடிகைகள் வந்து விஜயகாந்தின் பண்பு மற்றும் நடிப்பு திறமை ஆகியவற்றை பற்றி பேசினார்.

அந்தவகையில் நடிகர் விஷால் பேசியது தான் இப்போது ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அதாவது விஜயகாந்த் சினிமாவில் பலருக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டுள்ளார். அவ்வாறு விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் இடம் ஒன்று சொல்லி கொள்கிறேன்.

Also Read : புத்தாண்டு மயக்கம் தெளிந்த விஷால்.. விஜயகாந்த் சமாதியில் கண்ணீரோடு போட்ட பெர்ஃபாமன்ஸ்

அதாவது சண்முக பாண்டியன் படத்தில் நானும் நடிக்க ஆசைப்படுகிறேன். இவரை பெரிய ஹீரோவாக வளர்த்து விட வேண்டும், அவர் ஆசைப்பட்டால் கண்டிப்பாக சண்முக பாண்டியன் படத்தில் நான் நடிப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். ஏற்கனவே விஷால் நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்த போது நிறைய வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்.

அதில் எதுவும் தற்போது வரை நிறைவேற்றவில்லை. இப்போது விஷாலுக்கு பட வாய்ப்பு இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார். ஆகையால் முதலில் நீங்க பெரிய ஹீரோவாக மாறிய பிறகு சண்முக பாண்டியன் வளர்த்து விடுங்கள் என ரசிகர்கள் விஷாலை கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read : சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட விஷால்.. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என நிரூபித்த கேப்டன்

Trending News