திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அஜித்திற்கு நோ சொன்ன விஷ்ணுவர்தன்.. பிளாக்பஸ்டர் ஹீரோ குடுமி கையில் இருக்கும் போது என்ன கவலை

அஜித்தின் துணிவு படம் வெளியானதை தொடர்ந்து ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார் என்று வெளியானது. ஆனால் விக்னேஷ் சிவனின் அலட்சியத்தினால் இந்த வாய்ப்பு அவரை விட்டு கைநழுவி போனது.

அடுத்தபடியாக அஜித், ஏகே 62 படத்திற்காக இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் விஷ்ணுவர்தனிடம் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை. இதற்கு காரணம் சில வருடங்களுக்கு முன் விஷ்ணுவர்தன் ஏற்கனவே அஜித்திற்கு கதை ரெடி பண்ணி வைத்திருக்கிறார். மேலும் அந்த கதையை பற்றி அஜித்திடம் சொல்லி இருக்கிறார்.

Also read: விக்னேஷ் சிவனுடன் இணைய மறுத்த திரிஷா.. அஜித்தின் AK62 படத்திற்கு வந்த சோதனை

அதற்காக அஜித்தின் கால் சீட்டுக்காக அவர் காத்திருந்திருக்கிறார். ஆனால் அஜித் அப்பொழுது அதற்கு பிடி கொடுக்கவில்லை. இதனால் கடுப்பான விஷ்ணுவர்தன் இனியும் அஜித்திற்காக காத்திருந்தால் அது வேஸ்ட் என்று முடிவு பண்ணிட்டார். பின்பு இவர் மற்ற ஹீரோக்காக கதையை ரெடி பண்ணிட்டார்.

இப்பொழுது விஷ்ணுவர்தன் கையில் இரண்டு பெரிய படங்கள் இருக்கிறது. ஒரு படத்தின் கதையை பாலிவுட்டில் மிகப்பெரிய ஹீரோவான சல்மான் கானை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று பாலிவுட்டில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Also read: அஜித்திற்கு கிடைத்த தரமான வில்லன்.. AK62 செதுக்கி வைத்திருக்கும் விக்னேஷ் சிவன்

மற்றொரு படம் தமிழில் அதர்வா தம்பி ஆகாஷ்சை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கும் ஆகாஷ்ற்கு ஒரு திருப்புமுனையாக வெற்றி படத்தை கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்து வருகிறார். இதற்காக முழு ஈடுபாடுடன் நடித்து வருகிறார்.

இந்த மாதிரி மிகப்பெரிய கதைகளுடன் இரண்டு ஹீரோக்களின் குடுமி கையில் இருப்பதால் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று விஷ்ணுவர்தன் அஜித்திற்கு நோ சொல்லிவிட்டார். இதனால் அஜித், ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

Also read: AK-62, விக்னேஷ் சிவனை ஒதுக்க காரணமாய் இருந்த 5 விஷயங்கள்.. அஜித்தை இப்படி சங்கடப்படுத்தி இருக்காரே!

Trending News