ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட விஷ்ணு விஷால்.. விவாகரத்துக்கு பின் விழும் பலத்த அடிகள்

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி போன்ற டீசன்டான படங்களை கொடுத்து மக்கள் மனதை வென்றவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எஃப் ஐ ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் நடித்த ராட்சசன் படம் இன்று வரை திரில்லர் படங்களில் முதன்மையான படமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இவர் சமீப காலமாக ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். வளர்ந்து வரும் நடிகராக எந்த பிரச்சனைக்கும் போகாத இவர் சில சம்பவங்களின் மூலம் தன்னுடைய பெயரை தானே கெடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் இவர் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தைக்கு அப்பாவான இவர் தன்னுடைய மனைவியை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு கடந்த வருடம் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது கோலிவுட் வட்டாரத்தில் சில விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அது மட்டுமல்லாமல் நடிகர் சூரியுடன் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் பிரச்சனை காரணமாக அந்தப் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. அந்தப் பிரச்சனை இவருடைய பெயரை ரொம்பவும் டேமேஜ் செய்து விட்டது. மேலும் ராட்சசன் பட பிடிப்பின் போது இவர் அமலா பாலுடன் ஓவர் நெருக்கம் காட்டியதாகவும் சில தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது அவர் ஆடையில்லாமல் எடுத்த போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் பிரச்சனையை கிளப்பிவிட்டது. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் எதற்கும் ஒரு வரைமுறை இல்லையா என்று இவரை கண்டபடி திட்டி தீர்த்தனர்.

அந்த அளவுக்கு விஷ்ணு விஷால் தன்னுடைய பெயரை தானே எடுத்துக் கொண்டார். இதன் மூலம் அவருடைய சினிமா வாழ்க்கையும் தற்போது கேள்விக்குறியாகும் நிலையில் இருக்கிறது. இதைப் பார்த்த அவரின் ரசிகர்கள் விஷ்ணு விஷால் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறார் என்று கூறி வருகின்றனர்.

Trending News