ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

விஷ்ணு விஷாலை பிடித்து ஆட்டும் கெட்ட நேரம்.. ராட்சசனை வைத்து இன்றுவரை ஓட்டிய கதை

தற்போது பல நடிகர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்து அதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்கள். அவ்வாறு விஷ்ணு விஷால் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறார். ஆரம்பத்தில் விஷ்ணு விஷால் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெண்ணிலா கபடி குழு, நீர்பரவை, குள்ளநரி கூட்டம், முண்டாசுபட்டி போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு விஷ்ணு விஷால் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இதனால் மீண்டும் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் கடினமாக உழைத்து வந்தார்.

அப்போதுதான் ராட்சசன் படம் விஷ்ணு விஷாலுக்கு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. கதையின் விருவிருப்பு, சுவாரசியம், நடிப்பு என அனைத்துமே ராட்சசன் படம் ரசிகர்களை நாற்காலி நுனிக்கு வரச் செய்தது. இந்தப் பெயரை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என விஷ்ணு விஷால் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தனது சொந்த தயாரிப்பு மூலம் எஃப் ஐ ஆர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி லாபத்தைப் பெற்றுத் தந்தாலும் மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்க்க படவில்லை. இந்நிலையில் விஷ்ணு விஷால் ஒரு பெரிய சிக்கலில் உள்ளார். அதாவது 2018 இல் அவர் நடித்த படம் ஜகஜால கில்லாடி.

இப்படத்தில் அவருடன் நிவேதா பெத்துராஜ், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை இயக்கிய எழில் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் தற்போது வரை ரிலீசாகாமல் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

காதல் கலந்த நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படத்தில் ரிலீசுக்காக விஷ்ணு விஷால் காத்திருக்கிறார். இவரிடம் பல திறமைகள் இருந்தாலும் தற்போது அவருடைய கேட்ட நேரத்தால் ராட்சசன் படம் போல் மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

Trending News