விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எஃப் ஐ ஆர் படத்தில் ஒரு முஸ்லிம் இளைஞனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் ரெபா மோனிக்கா, மஞ்சிமா மோகன், பிக் பாஸ் ரைசா வில்சன், கௌரவ் நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர். எஃப் ஐ ஆர் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக இருந்தது. பல காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. எஃப் ஜ ஆர் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கி வெளியிடுகிறது.
இப்படத்தை கௌதம் மேனனின் உதவி இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். எஃப் ஐ ஆர் படம் திரையரங்கு உரிமையை சேர்க்காமல் சுமார் 22 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் செய்துள்ளதால் படத்தை லாபத்தில் கொண்டு போய் உள்ளது. இதில் பெரும்பாலும் சாட்டிலைட், ஓடிடி, ஹிந்தி டப்பிங் உரிமைகள் போன்றவற்றால் லாபத்தை அடைந்துள்ளது.
எஃப் ஐ ஆர் படம் தயாராகி பல நாள் ஆனாலும் விஷ்ணு விஷாலின் சரியான வணிக ஒப்பந்தத்திற்கான காத்திருந்தது இந்த லாபத்தை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. நல்ல நடிகராக மட்டுமல்லாமல் தற்போது இப்படத்தின் மூலம் லாபகரமான தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார்.
எஃப் ஐ ஆர் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள். ராட்சசன் போல் எஃப் ஜ ஆர் படமும் விஷ்ணு விஷாலுக்கு மிகப் பெரிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
