வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அவரால் கிடைக்கும் வெற்றி எனக்கு வேண்டவே வேண்டாம்.. உச்சகட்ட கோபத்தில் விஷ்ணு விஷால்

சினிமா என்றாலே பணமோசடி என்பது சகஜம் தான், அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர் ஒருவரை விஷ்ணு விஷாலின் அப்பா ஏமாற்றியதாக கூறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அந்த வழக்கின் விசாரணை சம்பந்தமாக வந்த கடைசி தீர்ப்பினால் விஷ்ணு விஷால் தற்போது பெரும் கோபத்தில் உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவரும் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் விஷ்ணு விஷாலும் வெண்ணிலா கபடி குழு படத்தில் இணைந்து நடித்ததில் ஆரம்பித்து நல்ல நட்போடு பழகி வந்தனர். ஆனால் இவர்களுக்குள் இவ்வளவு பெரிய பஞ்சாயத்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

சூரி அவர்கள் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது பண மோசடி புகார் அளித்து நீதி மன்றத்தில் வழக்கு நடப்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 2015 ஆம் ஆண்டு அன்புவேல்ராஜன் தயாரிப்பில் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க அதே படத்தில் காமெடி நடிகராக சூரி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அப்போது காமெடி நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறது. ஆனால் பேசப்பட்ட சம்பள பணத்திற்கு பதிலாக இன்னும் சில கோடிகள் கொடுத்தால் உங்களுக்கு அந்த பணத்தில் நிலம் வாங்கித் தருவதாக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் என இருவரும் நம்பிக்கையாக கூறி இருக்கின்றனர்.

இதனால் நடிகர் சூரியும் நம்பி பணத்தை கொடுத்து சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் இருவரும் சேர்ந்து சூரியை ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. பின்பு சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கு முன்னாள் டிஜிபி ரமேஷ் ஒரு முன்னாள் அதிகாரி என்பதால் அவருக்கு ஆதரவாக நகர்வதாக சூரி கோர்ட்டில் பின்பு முறையிட்டு இருக்கிறார்.

இந்த வழக்கு வெகு காலமாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு வழக்கை மாற்ற கோரி முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி கூறியது அன்புவேல் ராஜன் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ் மீது புதிதாக விசாரணை நடத்த வேண்டும்

மேலும் ஆறு மாதத்திற்குள் இந்த வழக்கை முடித்து விட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து விஷ்ணு விஷால் அளித்த பேட்டியும் வைரலாகி வருகிறது. அதில் சூரியை வாழ்க்கை முழுக்க மன்னிக்கவே முடியாது. சூரி கூட நடிச்சு வர்ற வெற்றி தேவையே இல்லை என்று காட்டமாக கூறி இருக்கிறார் விஷ்ணு விஷால்.

Trending News