வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தலைவரைத் தாண்டி அலப்பறை பண்ணும் லால் சலாம் நடிகர்.. வாய்ப்பு கொடுத்தவரையே பதம் பார்க்கும் புத்திசாலித்தனம்

Vishnu Vishal showing over attitude in Laal salaam shooting spot: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் விக்ராந்த் விஷ்ணு விஷால் நடிப்பில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ள கிரிக்கெட் அரசியலை பேசும் படம் லால் சலாம். லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 9 அன்று ரிலீஸ் ஆகிறது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இத்திரைப்படத்தில் ரஜினியை தவிர கிரிக்கெட் வீரர் கபில்தேவும் சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடித்த நடிகர்கள் பலரும் தனது  சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து இருந்தனர்.

விஷ்ணு விஷாலின் முன்னாள் மனைவி ரஜினி அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பரின் மகள் ஆவார்.  தலைவர் லால்சலாம் படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடிப்பதற்கு முன்பு தனது நண்பரின் மகள் ரஜினியிடம் இதில் நடிக்கட்டுமா என்று அனுமதி வாங்கி நடித்த தாக தனது முன்னாள் மனைவி ரஜினி சொன்னதாக விஷ்ணு விஷால் பகிர்ந்து இருந்தார்.

Also read: 2024 தயாரிப்பாளர்களை மிரளவிடும் டாப் 5 ஹீரோக்களின் சம்பளம்.. இப்பவும் கெத்து காட்டும் ரஜினி

விஷ்ணு விஷால் தனது முன்னாள் மனைவியை பிரிந்திருந்த சமயம்  மதுவிற்கு அடிமையாகி  சினிமால சான்ஸ் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு இருந்து வந்தாராம். அந்த சமயம் உதயநிதி அவர்கள் விஷ்ணு விஷாலை கை தூக்கி விட்டாராம். இதை எஃப் ஐ ஆர் படத்தின் வெளியீட்டின் போது விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் அவர்கள் உதயநிதி விஷ்ணு விஷாலிற்கு காட் பாதர் மாதிரி, படங்களின் வெளியீட்டின் போதும் நட்பு ரீதியாகவும்  உதயநிதி உறுதுணையாக இருந்து வருகிறார் என்றுபுகழ்ந்து தள்ளினார்.

அதுமட்டுமில்லாமல் லால் சலாம் படத்தில் நடிக்க இருந்த ஆர்யாவை தூக்கிவிட்டு அந்த கதாபாத்திரத்திற்கு விஷ்ணு விஷாலை நடிக்க சிபாரிசு செய்ததும் உதயநிதி தான். ஆனால் விஷ்ணு விஷால் அவர்கள் ஷூட்டிங் வரதுக்கு முன்னாடியே 20 நபர்கள் வந்து, ஏதோ பிரைம் மினிஸ்டர் செக்யூரிட்டி கார்டு போல் ஷூட்டிங் நடக்கும் இடத்தை ஆராய்வது பாதுகாப்பு என ஓவர் ஆட்டிட்யூட் காட்டுகிறார் விஷ்ணு விஷால். சான்ஸ் வாங்கி கொடுத்த உதயநிதியோ என்ன கொடுமை சார் இது? என்று கடுப்பில் உள்ளாராம்.

மும்பையில் இருந்து ஹேர் டிரஸ்ஸர் வர வச்சு, அவருக்கு நாளைக்கு 20,000 என சம்பளம் பேசி அதையும் தயாரிப்பாளர் தலையில் கட்டி விடுகிறார் விஷ்ணு விஷால். தலைவரே அடக்கி வாசிக்கும் போது இந்த வால் சும்மா இல்லாம ரொம்ப ஆட்டம் போடுவதாக  லால் சலாம் பட குழுவினர் ஆதங்கப்பட்டு உள்ளனர். சூப்பர் ஸ்டார் உயர்ந்த மனிதர் அவரை பார்த்து நிறைய கத்துக்க வேண்டியது உள்ளது என புகழ் பாடும் விஷ்ணு விஷால் செயலிலும் இறங்கினால் நலமே!

Also read: விஜய் தம்பி வளர கூடாது என திட்டம் தீட்டும் விஷ்ணு விஷால்.. வாரிசு நடிகருக்கே இந்த நிலைமையா!

Trending News